தேவுடா தேவுடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்சந்திரமுகி

Devuda Devuda Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹரே ஹரே…
ஹரே ஹரே ஹரே…

—BGM—

ஆண் : தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா…

—BGM—

ஆண் : சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா…

—BGM—

ஆண் : ஏ… தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா…
சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா…

ஆண் : எங்காளின் உள்ளங்கள்…
எல்லாமே வைரங்கள்…
நீ கொஞ்சம் பட்டை தீட்டடா…

ஆண் : ரிப்பிட்டு…

குழு : எங்காளின் உள்ளங்கள்…
எல்லாமே வைரங்கள்…
நீ கொஞ்சம் பட்டை தீட்டடா…

—BGM—

ஆண் : சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே…
ஓஓ… ஓஓ… ஓஓ…
சொர்க்கம் வரும் இந்த மண் மேலே…
ஓஓ… ஓஓ… ஓஓ…

ஆண் : தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா…

—BGM—

ஆண் : சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா…

—BGM—

ஆண் : ஏ… ஹரே ஹரே… ஹரே ஹரே…
ஹரேரா ஹரே… ஹரேரா ஹரே…

ஆண் : எண்ணிப்பாரு கொஞ்சம்…
ஏர் பிடிக்கும் ஆள…
சோத்தில் நாம கைய வைக்க…
சேத்தில் வைப்பான் கால…

குழு : ஹேய்… ஹேய்… ஹேய்… ஹேய்…

ஆண் : சாக்கடைக்குள் போயி…
சுத்தம் செய்யும் பேரு…
நாலு நாளு லீவு போட்டா…
நாறிப்போகும் ஊரு…

ஆண் : முடி வெட்டும் தொழில்…
செய்யும் தோழன்தான் இல்லையேல்…
நமக்கெல்லாம் ஏது அழகு…

ஆண் : நதி நீரில் நின்று…
துணி துவைப்பவன் இல்லையேல்…
வெளுக்குமா உடை அழுக்கு…

ஆண் : எந்த தொழில் செய்தால் என்ன…
செய்யும் தொழில் தெய்வம் என்று…
பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே…

ஆண் : ரிப்பிட்டு…

ஆண் : சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே…
ஓஓ… ஓஓ… ஓஓ…
சொர்க்கம் வரும் இந்த மண் மேலே…
ஓஓ… ஓஓ… ஓஓ…

குழு : ஆ… தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா…
சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா…

—BGM—

ஆண் : உன்னைப்பற்றி யாரு…
அடஎன்ன சொன்னால் என்ன…
இந்த காதில் வாங்கி…
அதை அந்த காதில் தள்ளு…

—BGM—

ஆண் : மேகம் மிதந்தாலும்…
காகம் பறந்தாலும்…
ஆகாயம் தான் அழுக்காக…
ஆகாதுன்னு சொல்லு…

ஆண் : பூப்பந்தை யாரும்…
நீரில் பொத்தித்தான் வெச்சாலும்…
பந்து வரும் தண்ணி மேலத்தான்…

ஆண் : அட உன்னை யாரும்…
ஓரம் கட்டித்தான் வெச்சாலும்…
தம்பி வாடா பந்து போலத்தான்…

ஆண் : மூணாம் பிறை மெல்ல மெல்ல…
வெண்ணிலவாய் மின்னுவதை…
மின்மினிகள் தடுத்திடுமா…

ஆண் : ரிப்பிட்டு…

ஆண் : சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே…
ஓஓ… ஓஓ… ஓஓ…
சொர்க்கம் வரும் இந்த மண் மேலே…
ஓஓ… ஓஓ… ஓஓ…

ஆண் : தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா…
குழு : ஹரே ஹரே ஹரே ஹரே…
ஹரே ஹரே ஹரே ஹரே…

ஆண் : சுவாமி… சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா…
குழு : ஹரே ஹரே ஹரே ஹரே…
ஹரே ஹரே ஹரே ஹரே…

ஆண் : எங்காளின் உள்ளங்கள்…
எல்லாமே வைரங்கள்…
நீ கொஞ்சம் பட்டை தீட்டடா…

ஆண் : ரிப்பிட்டு… குழு : எங்காளின் உள்ளங்கள்…
எல்லாமே வைரங்கள்…
நீ கொஞ்சம் பட்டை தீட்டடா…

ஆண் : சபாஷ்சு…

குழு : சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே…
ஓஓ… ஓஓ… ஓஓ…
சொர்க்கம் வரும் இந்த மண் மேலே…
ஓஓ… ஓஓ… ஓஓ…


Notes : Devuda Devuda Song Lyrics in Tamil. This Song from Chandramukhi (2005). Song Lyrics penned by Vaali. தேவுடா தேவுடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading