கொச்சின் மாடப்புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி . உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாதேவாஉன்னுடன்

Cochin Madapura Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

பெண் : நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே…
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே…

ஆண் : இனி இருவரா இல்லை ஒருவரா…
பெண் : சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…

—BGM—

ஆண் : உன் வாய் மலர் பூத்தால் என்ன…
ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
நீ பாலைவனத்தில் ஐஸாய் கரைவதென்ன…

பெண் : நீ கூட நடந்தால் என்ன…
என்னைக் கொள்ளை அடித்தால் என்ன…
நீ கடலில் பெய்த துளி போல் ஒளிவதென்ன…

ஆண் : கண்ணால் யாசிக்கிறேன்…
காதல் சொன்னால் என்ன…

பெண் : நானும் யோசிக்கிறேன்…
அதை நீயா சொன்னால் என்ன…

ஆண் : உன் பார்வை என் கண்ணில்…
மோதிய செய்தி என்ன…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…

—BGM—

பெண் : சின்னச்சிறியது பறவை…
தன் சிறகில் சுமக்குது சிலுவை…
இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை…

ஆண் : சந்திர மண்டலம் வரையும்…
நான் தவிப்பில் இருப்பது புரியும்…
என் விடுகதைக்கெல்லாம் உனக்கே விடை தெரியும்…

பெண் : வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை பல…
ஆண் : ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல…
பெண் : சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உழ…

ஆண் : கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…

—BGM—


Notes : Cochin Madapura Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. கொச்சின் மாடப்புறா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading