சந்திர மண்டலத்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய், ஹரிணி & எஸ்.பி.பி. சரண்வித்யாசாகர்நிலாவே வா

Chandira Mandalathai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…

—BGM—

ஆண் : வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

—BGM—

குழு : ஹேய்… சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

பெண் : இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்…
அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்…
குழு : புத்துலகம் கண்டு வைப்போம்…

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

—BGM—

பெண் : கண்ணில் ஒரு கள்ளம் இல்லை…
விண்வெளியில் பறக்க…
ஒரு விசா தேவையில்லை…
கை விலங்கு ஏதும் இல்லை…

ஆண் : பூமி ஒரு பள்ளிக்கூடம்…
பூவை மட்டும் படித்திருப்போம்…
புத்தகம் தேவையில்லை…
எங்கள் புத்தியில் பாரமில்லை…

பெண் : ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால்…
நட்பை வளக்கலாம்…

ஆண் : ஹேய்… காதலையும் கடந்து…
ஒரு கற்பை வளர்க்கலாம்…

பெண் : நாம் கண்டோம் புதிய இயக்கம்…
ஆண் : இது கண்ணீர் துளியை ஒழிக்கும்…

பெண் & ஆண் : நாம் காணும் கனவு பலிக்கும்…
எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும்…

பெண் : சந்திர மண்டலத்தை…
ஆண் : சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்…
பெண் : வார்த்தைகள் கோலமிட்டு…
ஆண் : புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

—BGM—

ஆண் : ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால்…
கட்டுக்கதை கட்டி இந்த ஊரும் சிரிக்குமே…
அது உண்மையை எரிக்குமே…

பெண் : தண்ணீரிலே தன்னை சுற்றி…
தவளைகள் கத்தும் போதும் தாமரை மலருமே…
ஆண் : ஹூம் ஹூம்… தாமரை மலருமே…

ஆண் : வானில் விடும் பட்டம் போலே…
வட்டம் அடிக்கலாம்… ஹேய்…

பெண் : வால் முளைத்த ஜீவன் போலே…
கொட்டம் அடிக்கலாம்…

ஆண் : இனி போதாதிந்த உலகம்…
பெண் : நாம் காண்போம் பத்தாம் கிரகம்…
ஆண் : அங்கு இல்லை இல்லை மரணம்…
குழு : எங்கள் இனம் காலத்தை வெல்லட்டும்…

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

பெண் : இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்…
ஆண் : அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்…
குழு : புத்துலகம் கண்டு வைப்போம்…

—BGM—


Notes : Chandira Mandalathai Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. சந்திர மண்டலத்தை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading