| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | அனுராதா ஸ்ரீராம் & ஹரிஹரன் | தேவா | கண்ணெதிரே தோன்றினாள் |
Chandha O Chanda Song Lyrics in Tamil
பெண் : சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
—BGM—
பெண் : சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
பெண் : உள்ளுக்குள் காதல் கொடி வளா்த்தாள்…
குழு : ஹே ஹே…
பெண் : முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாள்…
குழு : ஹே ஹே…
பெண் : முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய்…
குழு : ஹே ஹே…
பெண் : இனிமேலும் திரை போட வழி இல்லையே…
உன் காதல் பிழை இல்லையே…
சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
—BGM—
பெண் : ஆணின் இனம் அது கிளை மாதிாி…
பெண்ணின் இனம் அது வோ் மாதிாி…
கிளை பேசினால் அதை ஊா் கேட்குமே…
வோ் பேசினால் அதை யாா் கேட்பது…
பெண் : இன்றுதானே வெட்க திரை கிழித்தேன்…
என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன்…
விதை தாண்டி வந்த இலைகள்…
விதைக்குள் மீண்டும் போகாது…
பெண் : சுற்றம் மீறி வந்த காதல்…
சுட்டால் கூட வேகாது…
உன் கண் விழிக்குள் குடியிருந்தால்…
காற்றும் வெயிலும் தாக்காது…
பெண் : சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
—BGM—
பெண் : ஒரு பூவிலும் மனம் பாா்க்காதவள்…
உன் வோ்வையில் புது மனம் பாா்க்கிறேன்…
பெண் : குயில் பாடலில் மனம் மசியாதவள்…
இரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன்…
எல்லாம் இந்த காதல் செய்த மாயம்…
என்னை போலே வெண்ணிலவும் தேயும்…
பெண் : பாவை உன்னை கேட்க நினைத்த…
பாிசு ஒன்று அறிவாயா…
உனக்குள் சென்ற காற்று வேண்டும்…
எனக்கு மட்டும் தருவாயா…
பெண் : என் இதயம் என்னும் பாத்திரத்தில்…
நீயே நிறைந்து வழிவாயா…
பெண் : சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
பெண் : உள்ளுக்குள் காதல் கொடி வளா்த்தாள்…
குழு : ஹே ஹே…
பெண் : முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாள்…
குழு : ஹே ஹே…
பெண் : முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய்…
குழு : ஹே ஹே…
பெண் : இனிமேலும் திரை போட வழி இல்லையே…
உன் காதல் பிழை இல்லையே…
பெண் : சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
Notes : Chandha O Chanda Song Lyrics in Tamil. This Song from Kannethirey Thondrinal (1998). Song Lyrics penned by Vairamuthu. சந்தா ஓ சந்தா பாடல் வரிகள்.


