Category Archives: தாயின் மணிக்கொடி

nooranduku-oru-murai-song-lyrics-in-tamil

நூறாண்டுக்கு ஒருமுறை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகோபால் சர்மா & தேவிவித்யாசாகர்தாயின் மணிக்கொடி

Nooranduku Oru Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா…
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா…
இதழோடு இதழ் சேர்த்து…
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா…

பெண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா…
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா…

BGM

பெண் : கண்ணாளனே கண்ணாளனே…
உன் கண்ணிலே என்னை கண்டேன்…

ஆண் : கண் மூடினாள் கண் மூடினாள்…
அந்நேரமும் உன்னை கண்டேன்…

பெண் : ஒரு விரல் என்னை தொடுகையில்…
உயிர் நிறைகிறேன் அழகா…

ஆண் : மறு விரல் வந்து தொடுகையில்…
விட்டு விலகுதல் அழகா…

பெண் : உயிர் கொண்டு வாழும் நாள் வரை…
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா…

ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா…

பெண் : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா…

BGM

ஆண் : இதே சுகம் இதே சுகம்… ம்ம்ம்…
எந்நாளுமே கண்டால் என்ன…

பெண் : இந்நேரமே இந்நேரமே…
என் ஜீவனும் போனால் என்ன…

ஆண் : முத்தத்திலே பலவகை உண்டு…
இன்று சொல்லட்டுமா கணக்கு…

பெண் : இப்படியே என்னை கட்டி கொள்ளு…
மெல்ல விடியட்டும் கிழக்கு…

ஆண் : அச்சம் பட வேண்டாம் பெண்மையே…
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே…

பெண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா…
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா…

ஆண் : இதழோடு இதழ் சேர்த்து…

பெண் : உயிரோடு உயிர் கோர்த்து…

ஆண் & பெண் : வாழவா… ஆஆ…

ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா…

பெண் : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா…

BGM


Notes : Nooranduku Oru Murai Song Lyrics in Tamil. This Song from Thaayin Manikodi (1998). Song Lyrics penned by Vairamuthu. நூறாண்டுக்கு ஒரு முறை பாடல் வரிகள்.