Category Archives: சூரக்கோட்டை சிங்கக்குட்டி

சூரக்கோட்டை சிங்கக்குட்டி – Soorakottai Singakutti (1983)

காளிதாசன் கண்ணதாசன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன் & பி. சுசீலாஇளையராஜாசூரக்கோட்டை சிங்கக்குட்டி

Kalidasan Kannadasan Song Lyrics in Tamil


BGM

ஆண் : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ…
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்…

பெண் : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ…
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்…

ஆண் : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ…

BGM

பெண் : ஓடைப்பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய…
ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய…

ஆண் : தாமரை மடலே தளிருடலே அலைத்தழுவ…
பூ நகை புரிய இதழ் விரிய மது ஒழுக…

பெண் : இனிமைதான்… ஆஅ…
இனிமைதான் பொழிந்ததே வழிந்ததே…

பெண் : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ…
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்…

ஆண் : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ…

BGM

ஆண் : தந்தானே தானே ஹோய்…
தந்தானே தானே…
தந்தானே தானே ஹோய்…
தந்தானே தானே…

ஆண் : தந்தானே தானே னா தந்தானே தானா…
தந்தானே தானே னா தந்தானே தானா…

ஆண் : ஆதியந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய… ஹோய்…
மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய…

பெண் : பூவுடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க…
பார்க்கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க…

ஆண் : சமயம்தான்… சமயம்தான் அமைந்ததே அழைத்ததே…

ஆண் : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ…
பெண் : நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்…

ஆண் : காளிதாசன்…
பெண் : கண்ணதாசன்…
ஆண் : கவிதை நீ…

BGM


Notes : Kalidasan Kannadasan Song Lyrics in Tamil. This Song from Soorakottai Singakutti (1983). Song Lyrics penned by Vaali. காளிதாசன் கண்ணதாசன் பாடல் வரிகள்.