Category Archives: எங்க ஊர் ராசாத்தி

எங்க ஊர் ராசாத்தி – Enga Ooru Rasathi (1980)

பொன் மானைத்தேடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. சைலஜா & மலேசியா வாசுதேவன்கங்கை அமரன்எங்க ஊர் ராசாத்தி

Ponmana Thedi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…

BGM

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை…
அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி…

ஆண் : அடி நீ சொன்ன பேச்சு…
நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி…
அடி நான் சொன்ன பாட்டு…
ஆத்தோரம் வீசும் காத்தோடு போச்சுதடி…

BGM

பெண் : மானோ தவிச்சு வாடுது…
மனசு நெனச்சு வாடுது…
எனக்கும் ஆச இருக்குது…
ஆனா நெலம தடுக்குது…

பெண் : உன்ன மறக்க முடியுமா…
உயிரை வெறுக்க முடியுமா…
ராசாவே காற்றில் ஆடும் தீபம் போல…
துடிக்கும் மனச அறிவாயோ…

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை…

BGM

ஆண் : எனக்கும் உன்ன புரியுது…
உள்ளம் நல்லாத் தெரியுது…
அன்பு நம்ம சேர்த்தது…
ஆச நம்ம பிரிச்சது…

ஆண் : உன்ன மறக்க முடியல…
உயிரை வெறுக்க முடியல…
ராசாத்தி நீயும் நானும் ஒண்ணா சேரும்…
காலம் இனிமேல் வாராதோ…

பெண் : இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்…
ஒண்ணோடு ஒண்ணா கலந்து அப்போது இருப்போம்…
அது கூடாமப் போச்சுதுன்னா என் ராசாவே…

பெண் : நான் வெண் மேகமாக விடிவெள்ளியாக…
வானத்தில் பிறந்திருப்பேன்…
என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா…
அப்போது நான் சிரிப்பேன்…

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை…


Notes : Ponmana Thedi Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Rasathi (1980). Song Lyrics penned by Muthulingam. பொன் மானைத்தேடி பாடல் வரிகள்.


ஆசப்பட்டு பாத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். ஜானகிகங்கை அமரன்எங்க ஊர் ராசாத்தி

Asapattu Paatha Oru Song Lyrics in Tamil


பெண் : ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு…
ஆசப்படி புருஷன் வரட்டுமே…
ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு…
ஆசப்படி புருஷன் வரட்டுமே…
அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே…
அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே…

BGM

பெண் : மாசி மாசத்திலே கல்யாணம் வீதி ஊர்கோலம்…
மூணு முடிச்சி போட ஒருத்தன் ஓடி வருவாண்டி…

BGM

பெண் : மாசி மாசத்திலே கல்யாணம் வீதி ஊர்கோலம்…
மூணு முடிச்சி போட ஒருத்தன் ஓடி வருவாண்டி…

பெண் : நான் பாத்து என்ன கேட்டாலும்…
ஹூஹூம்ன்னு சொல்லமாட்டாண்டி…
நக நட்டு சேல நான் கெட்ட வேள…
நெனச்சது போலே கொடுப்பாண்டி…

பெண் : ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு…
ஆசப்படி புருஷன் வரட்டுமே…
அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே…
அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே…

BGM

பெண் : பார்த்தா ஊர் மயங்கும் ஆண்பிள்ளை…
வாய்ச்ச மாப்பிள்ளை…
கையும் அழகு காலும் அழகு கட்டழகந்தாண்டி…

BGM

பெண் : பார்த்தா ஊர் மயங்கும் ஆண்பிள்ளை…
வாய்ச்ச மாப்பிள்ளை…
கையும் அழகு காலும் அழகு கட்டழகந்தாண்டி…

பெண் : பூப்போலே என்னை எடுப்பாண்டி…
பசக்குன்னு ஒண்ணு கொடுப்பாண்டி…
மாலையோடு மேளம் கூடி வரும் காலம்…
நாளை வருமின்னு நெனச்சேண்டி…

பெண் : ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு…
ஆசப்படி புருஷன் வரட்டுமே…
அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே…
அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே…

பெண் : ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு…
ஆசப்படி புருஷன் வரட்டுமே…
அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே…


Notes : Asapattu Paatha Oru Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Rasathi (1980). Song Lyrics penned by Muthulingam. ஆசப்பட்டு பாத்தா பாடல் வரிகள்.


சிறுக்கி ஒருத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. சைலஜா & மலேசியா வாசுதேவன்கங்கை அமரன்எங்க ஊர் ராசாத்தி

Sirukki Oruthi Song Lyrics in Tamil


ஆண் : கத்திரிக்கோலு காசு தந்து…
உத்தரவு போட்டிருக்கு…
கட்டு ஜாக்கெட் மேலே இட்டுக்கட்டி பாட…

ஆண் : எதிர்ப்பாட்டு பாடச் சொல்லி…
எவரேனும் ஆசப்பட்டா…
துட்டப் போட்டு கேளுங்கிறேன்…
நானும் மெட்டு போட்டு பாடுகின்றேன்…

ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி…
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி…
வயசு பயல வந்தாளாம் தொரத்தி…
கண்ணால அளவெடுத்தா என் ராசவா பின்னால வரவழைச்சா…

BGM

பெண் : சின்னக் கண்ணா சிங்கார மன்னா…
நானும் வெவரம் அறியாத பொண்ணா…
சேர்ந்து வாரேன் உன் கூட ஒண்ணா…
கண்ணால அளவெடுத்து நீதானே பின்னால வரவழைச்சே…

ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி…
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி…
வயசு பயல வந்தாளாம் தொரத்தி…
கண்ணால அளவெடுத்தா ராசாத்தி பின்னால வரவழைச்சா…

பெண் : சின்னக் கண்ணா சிங்கார மன்னா…
நானும் வெவரம் அறியாத பொண்ணா…

BGM

பெண் : அழகேசா என் மகராசா…
நம் ஆத்தோரம் பூத்தது இந்த ரோசா…

BGM

ஆண் : பாலாறு இது பனஞ்சாறு…
என் பசியாற வந்தது பதினாறு…

பெண் : நாக்குல நீரூறுதோ…
நெஞ்சிலே தேனூறுதோ…
நெருங்கி இருக்கிற நேரம் வராதோ…

ஆண் : ஆன வந்து திங்காத கரும்பே…
காத்து வந்து கிள்ளாத அரும்பே…

பெண் : சின்னக் கண்ணா சிங்கார மன்னா…
நானும் வெவரம் அறியாத பொண்ணா…
சேர்ந்து வாரேன் உன் கூட ஒண்ணா…
ஆண் : கண்ணால அளவெடுத்தா ராசாத்தி பின்னால வரவழைச்சா…

ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி…
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி…

BGM

ஆண் : உனக்காக வாழும் உசுராக…
ஒட்டி ஒண்ணாக இருப்பேன் உறவாக…

BGM

பெண் : ஒரு பாதி நீயும் மறுபாதி…
இது ஓதாதோ காதில் ஒரு சேதி…

ஆண் : ஆகாத காரியமா காப்பாளே மாரியம்மா…
நம்பி இருக்குது நல்ல மனம் ரெண்டு…

பெண் : கேட்ட வரங்க தானாக கிடைக்கும்…
போட்ட வெதைங்க பூவாக மொளைக்கும்…

ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி…
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி…
வயசு பயல வந்தாளாம் தொரத்தி…
பெண் : கண்ணால அளவெடுத்து நீதானே பின்னால வரவழைச்சே…

ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி…
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி…
வயசு பயல வந்தாளாம் தொரத்தி…


Notes : Sirukki Oruthi Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Rasathi (1980). Song Lyrics penned by Kannadasan. சிறுக்கி ஒருத்தி பாடல் வரிகள்.