பொன் மானைத்தேடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. சைலஜா & மலேசியா வாசுதேவன்கங்கை அமரன்எங்க ஊர் ராசாத்தி

Ponmana Thedi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…

—BGM—

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை…
அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி…

ஆண் : அடி நீ சொன்ன பேச்சு…
நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி…
அடி நான் சொன்ன பாட்டு…
ஆத்தோரம் வீசும் காத்தோடு போச்சுதடி…

—BGM—

பெண் : மானோ தவிச்சு வாடுது…
மனசு நெனச்சு வாடுது…
எனக்கும் ஆச இருக்குது…
ஆனா நெலம தடுக்குது…

பெண் : உன்ன மறக்க முடியுமா…
உயிரை வெறுக்க முடியுமா…
ராசாவே காற்றில் ஆடும் தீபம் போல…
துடிக்கும் மனச அறிவாயோ…

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை…

—BGM—

ஆண் : எனக்கும் உன்ன புரியுது…
உள்ளம் நல்லாத் தெரியுது…
அன்பு நம்ம சேர்த்தது…
ஆச நம்ம பிரிச்சது…

ஆண் : உன்ன மறக்க முடியல…
உயிரை வெறுக்க முடியல…
ராசாத்தி நீயும் நானும் ஒண்ணா சேரும்…
காலம் இனிமேல் வாராதோ…

பெண் : இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்…
ஒண்ணோடு ஒண்ணா கலந்து அப்போது இருப்போம்…
அது கூடாமப் போச்சுதுன்னா என் ராசாவே…

பெண் : நான் வெண் மேகமாக விடிவெள்ளியாக…
வானத்தில் பிறந்திருப்பேன்…
என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா…
அப்போது நான் சிரிப்பேன்…

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை…


Notes : Ponmana Thedi Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Rasathi (1980). Song Lyrics penned by Muthulingam. பொன் மானைத்தேடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading