Category Archives: அண்ணனுக்கு ஜே

அண்ணனுக்கு ஜே – Annanukku Jai (1989)

சோலை இளங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ்.சித்ராஇளையராஜாஅண்ணனுக்கு ஜே

Solai Ilanguyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே…
சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே…
மாலை எடுத்து வாரேன் மச்சானே நாள் பார்த்து…
உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது…

BGM

ஆண் : இஷ்டப்படி அங்கும் இங்கும்…
துள்ளி வந்த காளை என்ன…
நீ பார்த்த வேளை கட்டுப்பட்டு நின்னதென்ன…

பெண் : பொன்னி நதி போல எங்கும்…
பொங்கி வந்த கன்னி என்ன…
கல்லணையப்போல கட்டி வச்ச மாயமென்ன…

ஆண் : என்ன இது மாயம் என்னென்னமோ கண்டேனே…
பெண் : நானும் ஒன்னபோல கேள்வி ஒண்ணு கேட்டேனே…

ஆண் : தட்டுகெட்ட நானும் மாற காரணமே நீதானே…
பெண் : ஆஹா உன்னப் பாத்து பாத்து ரசிச்சேனே நான்தானே…

ஆண் : சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே…

பெண் : மாலை எடுத்து வாங்க மச்சானே நாள் பார்த்து…
உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது…

BGM

பெண் : பூவிருக்கும் சோலையெல்லாம் பூங்குயிலப் போலிருந்து…
நான் பாடப்போறேன் மன்னவனின் பேரெடுத்து…

ஆண் : ஆடி வரும் தேகமென்ன…
அள்ளித்தந்த மோகமென்ன…
தீராத தாகம் தீர்த்து வெக்கும் நேரமென்ன…

பெண் : எண்ணங்களைப் போல ஒண்ணுக்கொன்ணு சேர்ந்தோமே…
ஆண் : உள்ள கதப் பேசி ஒத்துமையா வாழ்வோமே…

பெண் : சோகமிது மாறிப்போகும் சொந்தமிது மாறாது…
ஆண் : தோளில் நானும் சேரும்போது வேணான்னு சொல்லாது…

பெண் : சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே…
ஆண் : சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே…

பெண் : மாலை எடுத்து வாங்க மச்சானே நாள் பார்த்து…
ஆண் : உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது…

BGM


Notes : Solai Ilanguyile Song Lyrics in Tamil. This Song from Annanukku Jai (1989). Song Lyrics penned by Gangai Amaran. சோலை இளங்குயிலே பாடல் வரிகள்.