Category Archives: தெய்வமகன்

Kettathum Koduppavane Song Lyrics in Tamil

கேட்டதும் கொடுப்பவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்தெய்வமகன்

Kettathum Koduppavane Song Lyrics in Tamil

BGM

ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா…

ஆண் : ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா…

BGM

ஆண் : ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா…
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா…
சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா…
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா…

ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா…

BGM

ஆண் : தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா…
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா…
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா…
தந்தையை அறிந்ததில்லை…

ஆண் : ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா…
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை…
உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா…
உலகத்தில் வாழ விடு…

ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா…

BGM

ஆண் : நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா…
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா…
கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா…
குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா…
கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா…
குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா…

BGM

ஆண் : கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

ஆண் : எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா…
உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா…
கண்களைப் போலிமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா…
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா… கிருஷ்ணா…

BGM

ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா…

Notes : Kettathum Koduppavane Song Lyrics in Tamil. This Song from Deiva Magan (1969). Song Lyrics penned by Kannadasan. கேட்டதும் கொடுப்பவனே பாடல் வரிகள்.