பொம்மை நாயகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்சித்தன் ஜெயமூர்த்திசுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Bommai Nayagi Song Lyrics in Tamil


ஆண் : தெற்கத்தி சீமையிலே…
சீராள பூமியிலே…
வங்கக் கடலாடும் அனப்பான கடலூரு…

ஆண் : பெண்ணையாருக்கு அடியிலும் பரவனாறு ஓடி வரும்…
இங்க வாழும் மக்க கதையத்தான்…
அது வரலாறா பாடி வரும்…

—BGM—

ஆண் : தண்டோடரா அடிங்கடா…
சரவெடி வெடிங்கடா…
தண்டோடரா அடிங்கடா…
சரவெடி வெடிங்கடா…

ஆண் : முண்டாச கட்டுங்கடா…
முட்டிவரையில ஒட்டுங்கடா…
முண்டாச கட்டுங்கடா…
முட்டிவரையில ஒட்டுங்கடா…

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : மூணுபோகம் தருவா…
பக்கத்துண வருவா… ஆஅ…

—BGM—

ஆண் : ஏ… மூணுபோகம் தருவா…
பக்கத்துண வருவா…

ஆண் : தீமையெல்லாம் அட தீமையெல்லாம்…
அட தீமையெல்லாம் சாயதான்…
தீட்டுவாடா அருவா…

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

—BGM—

ஆண் : தத்தோம் தத்தோம் தா தை தை தா…

ஆண் : எல்லோரும் பத்து மாசம்தான்டா…
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா…
அட வாழ்க்கை இது நல்ல வரம்தாண்டா…
வாழச்சொன்னார் வள்ளுவர்தாண்டா…

ஆண் : அட ஆதியில் புறந்தோம்…
ஒ்ண்ணாக இருந்தோம்…
ஆணவ ஜாதி உன் நெஞ்சில ஏண்டா…

குழு : எல்லோரும் பத்து மாசம்தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா
எல்லோரும் பத்து மாசம்தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா

ஆண் : ஆண் பெண் இரண்டு ஜாதி…
அவ்வையார் சொன்ன நீதி…
ஆமா… ஆண் பெண் இரண்டு ஜாதி…
அவ்வையார் சொன்ன நீதி…

ஆண் : கேளடா நான் சொல்லும் சேதி…
விளக்கு விடியும் தேதி…
கேளடா நான் சொல்லும் சேதி…
விளக்கு விடியும் தேதி…

ஆண் : அட நீயென்ன நானென்ன…
கீழென்ன மேலென்ன…
எல்லாரும் ஒன்னுடா…
சொல்லுது மண்ணுடா…

குழு : எல்லோரும் பத்து மாசம்தான்டா…
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா…
எல்லோரும் பத்து மாசம்தான்டா…
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா…

—BGM—

ஆண் : ஹே… அன்புதான்டா இங்க மகத்துவம்…
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா எல்லாம் சமத்துவம்…

குழு : அட அன்புதான்டா இங்க மகத்துவம்…
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா எல்லாம் சமத்துவம்…

ஆண் : ஏ… மதச்சண்ட வேணாம்மடா…
அண்ணன் தம்பி ஆனோமடா…
எத கொண்டு போகப் போறோம்…
எல்லாம் சரி சமம்மடா…

குழு : அன்பு தான்டா இங்க மகத்துவம்…
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா எல்லாம் சமத்துவம்…

—BGM—

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வாராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : பொம்மை நாயகி புயலேறி வாராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

—BGM—


Notes : Bommai Nayagi Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Illaya Kamban. பொம்மை நாயகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading