அழைப்பாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & ஹரிணிஎஸ்.எஸ். தமன்காதலில் சொதப்புவது எப்படி

Azhaipaya Azhaipaya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விழுந்தேனா தொலைந்தேனா…
நிறையாமல் வழிந்தேனா…
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்…
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்…

ஆண் : கால் இல்லா ஆமை போல் காலம் ஓடுதே…
இங்கே உன் இன்மை உணர்கிற போது…
ஒரே உண்மை அறிகிறேன் நானே…

ஆண் : எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது…
உன் நெஞ்சிலும் உண்டா…
என்றெண்ணி இருதயம் துடிக்குதே…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
நொடியேனும் அழைப்பாயா…
பிடிவாதம் பிடிக்கின்றேன்…
முடியாமலே அழைப்பாயா…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
படிக்காமல் கிடக்கின்றேன்…
கடிகாரம் கடிக்கின்றேன்…
விடியாமலே அழைப்பாயா…

—BGM—

ஆண் : நான் என்ன பேச வேண்டும் என்று…
சொல்லிப் பார்த்தேன்…
நீ என்ன கூற வேண்டும் என்றும்…
சொல்லிப் பார்த்தேன்…

ஆண் : நான் அத்தனைக்கும் ஒத்திகைகள்…
ஓடவிட்டுப் பார்த்தேன்…
நீ எங்கு புன்னகைக்க வேண்டும்…
என்று கூட சேர்த்தேன்…

ஆண் : நிலைமை தொடர்ந்தால்…
என்ன நான் ஆகுவேன்…
மறக்கும் முன்னே அழைத்தால் பிழைப்பேன்…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
அலைபேசி அழைப்பாயா…
தலைகீழாய் குதிக்கின்றேன்…
குரல் கேட்கவே அழைப்பாயா…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
நடுஜாமம் விழிக்கின்றேன்…

ஆண் : நாட்காட்டி கிழிக்கின்றேன்…
உனைப் பார்க்கவே அழைப்பாயா…

—BGM—

பெண் : ஹே பாதி தின்று மூடிவைத்த…
தீனி போலவே…
என் காதில் பட்டு ஓடிப் போன…
பாடல் போலவே…

பெண் : என் நாசி மீது வீசி விட்ட…
மாயமான வாசம் போலே…
நீ பேசி வைக்கும் போது…
ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே…

ஆண் : சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே…
இதயம் இங்கே வேற் ஏதோ நேருதே…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
தவறாமல் அழைப்பாயா…

பெண் : தவறாக அழைத்தாலும்…
அது போதுமே அழைப்பாயா…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
மொழியெல்லாம் கரைந்தாலும்…
மௌனங்கள் உரைத்தாலே…
அது போதுமே அழைப்பாயா… ஆஅ…

—BGM—


Notes : Azhaipaya Azhaipaya Song Lyrics in Tamil. This Song from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012). Song Lyrics penned by Madhan Karky. அழைப்பாயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading