அழகூரில் பூத்தவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஎஸ் .பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்வித்யாசாகர்திருமலை

Azhagooril Poothavale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மழையூரின் சாரலிலே…
என்னை மார்போடு சேர்த்தவளே…

ஆண் : உனை அள்ளித்தானே…
உயிர் நூலில் கோர்ப்பேன்…
உயிர் நூலில் கோர்த்து…
உதிராமல் காப்பேன்…

ஆண் : அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…

—BGM—

பெண் : நீ உடுத்தி போட்ட உடை…
என் வயதை மேயுமடா…

ஆண் : நீ சுருட்டி போட்ட முடி…
மோதிரமாய் ஆகுமடி…

பெண் : இமையாலே நீ கிருக்க…
இதழாலே நான் அழிக்க…
கூச்சம் இங்கே…
கூச்சப்பட்டு போகிறதே…

ஆண் : சடையாலே நீ இழுக்க…
இடைமேலே நான் வழுக்க…
காய்ச்சலுக்கும் காய்ச்சல்…
வந்து வேகிறதே…

பெண் : என்னை திரியாக்கி…
உன்னில் விளக்கேற்றி…
எந்நாளும் காத்திருப்பேன்…

ஆண் : ஹோய் ஹோய்…
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…

—BGM—

ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே…
நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்…

பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே…
நான் இறங்கி தூங்கிடுவேன்…

ஆண் : குறிலாக நான் இருக்க…
நெடிலாக நீ வளர்க்க…
சென்னை தமிழ்…
சங்கத்தமிழ் ஆனதடி…

பெண் : அறியாமல் நான் இருக்க…
அழகாக நீ திறக்க…
காதல் மழை…
ஆயுள் வரை தூருமடா…

ஆண் : என்னை மறந்தாலும்…
உன்னை மறவாத…
நெஞ்சோடு நானிருப்பேன்…

பெண் : ஹோய் ஹோய் ஹோய்…
அன்பூரில் பூத்தவனே…

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
என்னை அடியோடு சாய்த்தவளே…

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
மழையூரின் சாரலிலே…

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
என்னை மார்போடு சேர்த்தவளே…

பெண் : உனை அள்ளித்தானே…
உயிர் நூலில் கோர்ப்பேன்…

ஆண் : உயிர் நூலில் கோர்த்து…
உதிராமல் காப்பேன்…


Notes : Azhagooril Poothavale Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Arivumathi. அழகூரில் பூத்தவளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading