அய்யய்யயோ ஆனந்தமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண்டி. இமான்கும்கி

Ayayayoo Aananthamey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அய்யய்யயோ ஆனந்தமே…
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே…

ஆண் : நூறு கோடி வானவில்…
மாறி மாறி சேருதே…
காதல் போடும் தூறலில்…
தேகம் மூழ்கி போகுதே…

ஆண் : ஏனோ ஒரு ஆசை…
வா வா கதை பேச… அய்யய்யோ…
அய்யய்யய்யோ…
அய்யய்யய்யோ…

—BGM—

ஆண் : உன்னை முதல்முறை…
கண்ட நொடியினில்…
தண்ணிக்குள்ள விழுந்தேன்…

ஆண் : அன்று விழுந்தவன்…
இன்னும் எழும்பல…
மெல்ல மெல்ல கரைந்தேன்…

ஆண் : கரை சேர நீயும்…
கையில் ஏந்த வா…
உயிா் காதலோடு நானும் நீந்தவா…

ஆண் : கண்களில் கண்டது பாதி…
வரும் கற்பனை தந்தது மீதி…
தொடுதே… சுடுதே… மனதே…

ஆண் : அய்யய்யயோ ஆனந்தமே…
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே…

—BGM—

ஆண் : கண்கள் இருப்பது…
உன்னை ரசித்திட… என்று
சொல்ல பிறந்தேன்…

ஆண் : கைகள் இருப்பது…
தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்…

ஆண் : எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்…
துணை சோ்ந்து போக…
தேதி பாா்க்கிறேன்…

ஆண் : நெற்றியில் குங்குமம் சூட…
இளம் நெஞ்சினில் இன்பமும் கூட…
மெதுவா… வரவா… தரவா…

ஆண் : அய்யய்யயோ ஆனந்தமே…
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே…

ஆண் : நூறு கோடி வானவில்…
மாறி மாறி சேருதே…
காதல் போடும் தூறலில்…
தேகம் மூழ்கி போகுதே…

ஆண் : ஏனோ ஒரு ஆசை…
வா வா கதை பேச…
அய்யய்யோ…

—BGM—


Notes : Ayayayoo Aananthamey Song Lyrics in Tamil. This Song from Kumki (2012). Song Lyrics penned by Yugabharathi. அய்யய்யயோ ஆனந்தமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading