அவிழாத காலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சித் ஸ்ரீராம்பிரகாஷ் நிக்கிதீங்கிறை

Avizhaadha Kaalai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவிழாத காலை பிறழாத பார்வை…
அமிழாத ஆசை தந்தாயே…
துயிலாத வேளை தொலையாத லீலை…
தெளியாத வாதை கொண்டேனே… ஹா…

ஆண் : மாசுழல் மனதிலே…
உன் நினைவினில் தினம் தினம் உழன்றிடும் நேரம்…
தீ திரள் உயிரிலே…
நீ தொலைவினில் எனைவிட்டு விலகிடும் நேரம்…

ஆண் : வானம் தாண்டி போகும் மேகம்…
இந்த பூமி கண்டதுமில்லை…
உன்னை தாண்டி போகும் எண்ணம்…
எந்தன் மனது கொண்டதுமில்லை…

ஆண் : அவிழாத காலை பிறழாத பார்வை…
அமிழாத ஆசை தந்தாயே…
துயிலாத வேளை தொலையாத லீலை…
தெளியாத வாதை கொண்டேனே…

—BGM—

ஆண் : காலை நேரத்தில் உனதிரு விழியில்…
சூரியன் காட்டுகிறாய்…
மாலை நேரத்தில் உனதிரு இதழில்…
தூங்கிட தூண்டுகிறாய்…

ஆண் : எனை வான் மேலே ஏற்றுது இமை விசிறி…
உன் அன்பாலே காண்கிறேன் அகப்புலரி…

ஆண் : மனம் போகாமல் போகும் தூரம்…
மழை தூறாமல் தூவுது உயிர் வரமே…

—BGM—

ஆண் : வீசும் சுவாசத்தில் பறவையை போல…
மிதந்திட தோன்றுமடி…
பார்க்கும் தூரத்தில் யுகம் பல வாழ…
இதயமும் ஏங்குமடி…

ஆண் : எனை கண்மூடி பார்க்கிறேன்…
முதன் முதலாய்…
உன் நினைவென்னை சாய்க்குதே…
கருஞ்சுழலாய்…

ஆண் : உனை நீங்காமல் வாழும் மேகம்…
எடை கூடாமல் ஆகிறேன் காற்றென நான்…

ஆண் : அவிழாத காலை பிறழாத பார்வை… பார்வை…
அமிழாத ஆசை தந்தாயே… தந்தாயே…
துயிலாத வேளை தொலையாத லீலை…
தெளியாத வாதை கொண்டேனே… கொண்டேனே…

—BGM—


Notes : Avizhaadha Kaalai Song Lyrics in Tamil. This Song from Theenkirai (2022). Song Lyrics penned by Mohan Rajan. அவிழாத காலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading