அவிய இவிய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஆர்.வினோதன்அந்தோனி தாசன்ஜெயப்பிரகாஸ்கும்பாரி

Aviya Eviya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவிய இவிய எல்லாரும் கேளுங்க…
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க…

—BGM—

ஆண் : அவிய இவிய எல்லாரும் கேளுங்க…
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க…

ஆண் : அப்பச்சி கதை சொல்ல போறேன்…
ஏஏ… மூப்பிடு வடக்காம பாரு…
வெட்டோத்தி எடுக்காம கேளும்… ஓய்… ஓய் ஓய்…

ஆண் : இஞ்ச நடக்கும் வேகளத்த…
ஓன் கூட்டுக்காரன்கிட்ட செல்லு…
கும்பாரி கும்… கும்…

ஆண் : அவிய இவிய எல்லாரும் கேளுங்க…
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க…

—BGM—

ஆண் : இஞ்ச வால இஞ்ச வால…
இஞ்ச வால இஞ்ச வால… லே… லே…
இஞ்ச வால இஞ்ச வால…
இஞ்ச வால இஞ்ச வால… மக்கா லேய்ய்…

ஆண் : போவலேய்ய்ய்…

—BGM—

ஆண் : மேற்க்குதடி யென் மூப்பன் சோத்துடா…
கலக்குமட்டை பனையேறி கெத்துடா…
கரமடியே இழுத்து நீயும் பாருவலே…
வல்லம் தள்ளி போகும் நாங்க சிங்கேம்லே…

ஆண் : தாக்கோலு போலவே இடுப்ப சுத்தி இருக்கு…
குடுவைக்குள்ள அக்கா நீ பாரு…
பட்டயில நீ குடிச்சா தல கெறங்கும் மக்கா…
பனம் கிழங்கு ஒடம்புக்கு மருந்து…

ஆண் : நேராலியேல சோன்ட இட்டு…
ஸ்லோப்பியா மீன பிடிச்சு…
உப்பும் மொளவும் பேரட்டி சுட்டு திண்ணுவோம்லே…

ஆண் : நூறு முட்டன் கிழங்க மயக்கி…
கிலாத்தி மீன்கறி வீதி வெரவி…
ஐ.ஆர்.8 சோரை பெனஞ்சி அடிப்போம்லே…

ஆண் : அப்பாவுமே வாராண்டாய்…
அந்தி பானை ஏறடே…
வெப்ரலம் எடுத்தேங்கி…
பழஞ்சி வெல்லம் குடுப்பான்…

ஆண் : மாம்பட்டை அடிச்சொண்டு…
முறுக்கான் முறுக்கி கிரங்கேயுண்டு…
செவர்முட்டி விழுந்தோண்டு…
தள்ளக்கெல்லாம் விழிச்சும்பலே…

குழு : கும்பாரி… ஏ கும்பாரி…
ஆண் : கும்பாரி…
குழு : குடிச்சொண்டு ஆட்டம் காட்டியாடி…

ஆண் : அவிய இவிய எல்லாரும் கேளுங்க…
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க…

—BGM—

ஆண் : மாடு வெட்டி பண்ணி வெட்டி…
மாசம் கழிச்சு தோத்து நரங்கி…
கண்ணே பொத்தி கிளிகிண்டி…
வட்டு கழிச்சி முளுச்சவிட்டி…

ஆண் : கலம் செல்லோம்ல…
ரைட்டா… ரைட்டு…
ரைட்டு… ராங்கு…
ரைட்டா… ராங்கு… ராங்கு…

ஆண் : என்னடே தங்கப்பா எங்க போறே…
கூலோடே வீட்டுக்கு போறேண்டே…
மாப்பிளை பயலுக்கா தோப்பன் யாரு…
பரம்பில பரமேஸ்வரன் கொத்தனாரு…

ஆண் : ஓல பரம்பில் இருக்கவச்சு…
அரிவெட்டியில் சோறெடுத்து…
வெட்டிமுறிச்சான் கறியே வீதி தருவாங்க…

ஆண் : மூக்குமுட்ட தின்னுப்புட்டு…
வாய் செவக்க வெத்தல இட்டு…
மனசார வாழ்த்திவிட்டு வாரும் ஒய்…

ஆண் : கடக்கரயில் இருந்து ஒன்னா…
குனுக்கு வச்சு சீட்டு களிச்சு…
தாயம் ஒருத்தி ஆடுப்புலி ஆட்டம் ஆடுவோம்லே…

ஆண் : கபடியாடி கச்சி களிச்சு…
கொளத்தில குளுச்சி கொல்லங்க பறிச்சி…
அண்டிய திருவி ஆமான் கடையில விப்போம்ல…

ஆண் : சாக்குட்டா சாட்டியாபுரம்…
முருங்குட்டி நாகுனி…
ஐத்திக்கோணி ஆரங்கி கீலேசு…

ஆண் : தள்ளும் புல்லும் கலிச்சவுண்டு…
கண்ணே கெட்டி விட்டோண்டு…
தொட்டு களிப்போம் வாரியலே… துவேது…

ஆண் : கும்பாரி யே கும்பாரி…
குமரி தமிழ நல்லா கேட்டியா நீ…
கும்பாரி நா குமரியில் நணபேண்டா…
மக்கா எல்லப்படி இல்லேர்ந்து…


Notes : Aviya Eviya Song Lyrics in Tamil. This Song from Kumbaari (2023). Song Lyrics penned by M.R. Vinothan. அவிய இவிய பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading