அவத்த பையா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயாசின் நிசார் & வந்தனா ஸ்ரீனிவாசன்ஜி. வி. பிரகாஷ்குமார்பரதேசி

Avatha Paiyya Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அவத்த பையா… செவத்த பையா…
அலிச்சாட்டியம் ஏனடா…
கவுச்சி மேல ஆசபட்ட கரிச்சாங்குஞ்சு நானடா…
செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல…
நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க…

பெண் : கஞ்சியில் கரைஞ்ச உப்புக்கல்ல போல…
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க…
நம்ம பூமி வறண்டிருக்கு…
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைசிருக்கு…

ஆண் : ஓஓஓ… அவத்த பொண்ணே…
செவத்த பொண்ணே…
அலிச்சாட்டியம் ஏனடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : வெண்ணி தண்ணி காச்சவா…
உன் மேலு காலு ஊத்தவா…
காச்சு போன கையில…
உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா…

ஆண் : கொட்டான் குச்சியில் மேலு தேச்சி…
குளிக்க வையடி…
என் அக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே…
நீ தள்ளி நில்லடி…
வராதடி… தொடாதடி…

பெண் : ஓஓஓ… அவத்த பையா…
செவத்த பையா…
அலிச்சாட்டியம் ஏனடா…

—BGM—

ஆண் : கூத்து பாக்க போகலாம்…
கூட மாட வாரியா…
சொல்லு பேச்சு கேக்குறேன்…
கொஞ்சம் நெல்லு சோறு தாறியா…

பெண் : எள்ளு போட்ட ஈசல் தாரேன்…
உன்ன தருவியா…
நான் முந்தி போட்டு மூடி வச்சு பூக்கள…
நீ மோந்து பாத்தியா…
முத்தாடையா… முட்டா பையா…

ஆண் : அவத்த பொண்ணே…
செவத்த பொண்ணே…
அலிச்சாட்டியம் ஏனடி…
இலுத்துவச்சு கழுத்தறுக்க…
இலிச்சவாயன் நானடி…

ஆண் : கயித்த அறுத்த கன்னுகுட்டி போல…
சித்தன் போக்கில் நான் அலைஞ்சேன்…
கருவா சிறுக்கி சீலையில் இருக்கி…
கட்டி போட்டு சிரிக்கிறியே…
உன் சூழ்ச்சி பழிச்சிருச்சே…
நெல்லு சோத்து பானைக்குள்ளே…
பூனை விழுந்திருச்சே…

—BGM—


Notes : Avatha Paiyya Song Lyrics in Tamil. This Song from Paradesi (2013). Song Lyrics penned by Vairamuthu. அவத்த பையா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading