அம்மாம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & அர்ச்சனா சபேஷ்ஜெய்வீரபாண்டியபுரம்

Ammamma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மாம்மா என்னானு தெரியல…
ஆகாயம் பூலோகம் புரியல…
பொண்ணுன்னா நீதானே உலகுல…
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…

ஆண் : கல் கண்டா நீ பேசும் அழகுல…
கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில…
சில் வண்டோ உன்னோட நிழலுல…
தேன் உண்ண தவம் கிடக்கு உசுருல…

ஆண் : ஒரு வழியில கோடி விளக்க…
கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க…
மலை அருவிய போல நீயும் பாசம் காட்டும் தேவத…

ஆண் : தினசரி உன்னை பார்த்து ரசிக்க…
பகல் வருவது எல்லாரும் வியக்க…
இளவரசிகள் எல்லாம் உனக்கு இல்ல இல்ல ஈடம்மா…

ஆண் : நீ மயிலாடும் பாறையில…
நடைபோடும் பூங்குயிலு…
உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு…

ஆண் : நீ மலக்கோயில் சேரயில…
குவியாதோ கை விரலு…
உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு…

ஆண் : அம்மாம்மா என்னானு தெரியல…
ஆகாயம் பூலோகம் புரியல…
பொண்ணுன்னா நீதானே உலகுல…
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…

—BGM—

ஆண் : ஏய்… உச்சி உச்சி வெள்ளி நிலா கண்ணானதோ… ஹோய்…
உன்ன கண்ட வெக்கத்துல மல்லாந்ததோ… ஹோ ஹோய்…
மகராசி உன்னோட முகமே…
மலை ஊத்தா சந்தோசம் தருமே…
புல் பூண்டும் உன் பேச்சில் பூவாகுமே…

ஆண் : ஆளில்லா காட்டுக்குள்ள ஆனந்த தூறல்தானே…
உன் அன்ப நானும் சொல்ல தருவார் யார் வார்த்தை கடனே…

ஆண் : நீ மயிலாடும் பாறையில…
நடைபோடும் பூங்குயிலு…
உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு…

ஆண் : நீ மலக்கோயில் சேரயில…
குவியாதோ கை விரலு…
உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு…

ஆண் : ஒரு வழியில கோடி விளக்க…
கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க…
மலை அருவிய போல நீயும் பாசம் காட்டும் தேவத…

ஆண் : தினசரி உன்னை பார்த்து ரசிக்க…
பகல் வருவது எல்லாரும் வியக்க…
இளவரசிகள் எல்லாம் உனக்கு இல்ல இல்ல ஈடம்மா…

ஆண் : நீ மயிலாடும் பாறையில…
நடைபோடும் பூங்குயிலு…
உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு…

ஆண் : நீ மலக்கோயில் சேரயில…
குவியாதோ கை விரலு…
உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு…

பெண் : அம்மாம்மா என்னானு தெரியல…
ஆகாயம் பூலோகம் புரியல…
ஆணுன்னா நீதானா உலகுல…
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…

பெண் : கல்கண்டா நீ பேசும் அழகுல…
கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில…
சில் வண்டோ உன்னோட நிழலுல…
தேன் உண்ண தவம் கிடக்கு தவம் கிடக்கு உசுருல…


Notes : Ammamma Song Lyrics in Tamil. This Song from Veerapandiyapuram (2022). Song Lyrics penned by Yugabharathi. அம்மாம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading