ஏத்தமையா ஏத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாமலேசியா வாசுதேவன் & கே. எஸ். சித்ராஇளையராஜாநினைவே ஒரு சங்கீதம்

Aethamayya Aetham Song Lyrics in Tamil


ஆண் : முந்தி முந்தி விநாயகரே…
முப்பத்து முக்கோடி தேவர்களே…
நீர் கொடுத்த நீரையெல்லாம்…
நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்…
சீராக ஏரோட்டி பார் முழுக்க…
சோற்கொடுத்து காக்க போறேன்…
ஆதரிக்க வேணும்மையா…

ஆண் : ஏத்தமையா ஏத்தம்…
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்…
ஏத்தமையா ஏத்தம்…
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்…

ஆண் : எங்கப்பன் உன் பாட்டன் முப்பாட்டன் சொத்து இது…
ஏத்தமையா ஏத்தம்…
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்…
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்…

பெண் : ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்…
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்…
ஏத்தமையா ஏத்தம்…
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்…

BGM

பெண் : கோவணத்தில் ஒரு காசிருந்தா…
கோழி கூவ ஒரு பாட்டு வரும்…

BGM

பெண் : பாட்டுபடிக்கிற என் மாமா…
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா…

BGM

பெண் : கோவணத்தில் ஒரு காசிருந்தா…
கோழி கூவ ஒரு பாட்டு வரும்…
பாட்டுபடிக்கிற என் மாமா…
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா…

ஆண் : கோவணமுமில்ல கையில் காசுமில்ல…
பாட்டு வருதே என்னபுள்ள…
கோயில் சிலை போல உன்ன கண்டதால்…
ஏத்தம் கேடுதே கன்னிபுள்ள…

பெண் : சேலைய பார்த்தாலே சொக்கி போகுற என் மாமா…
வேலைய பார் மாமா அந்த வெட்டி பேச்சு ஏன் மாமா…

ஆண் : காஞ்ச வயலுல தண்ணிய பாய்ச்சனும்…
பஞ்சத்த தீக்கனும் பசி தாகம் போக்கணும்…

பெண் : ஏத்தமையா ஏத்தம்…
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்…
ஏத்தமையா ஏத்தம்…
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்…

BGM

பெண் : ஸ்விச் ஒன்ன தட்டி வுட்டுபுட்டா…
பம்ப்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்…

BGM

பெண் : மச்சு வேல செய்ய வக்கில்லையே…
இங்கு வக்கணபேச்சு ஏன் மாமா…

BGM

பெண் : ஸ்விச் ஒன்ன தட்டி வுட்டுபுட்டா…
பம்ப்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்…
மச்சு வேல செய்ய வக்கில்லையே…
இங்கு வக்கணபேச்சு ஏன் மாமா…

ஆண் : எந்திரம் வச்சு வேல செய்யலாம்…
நாமென்ன செய்ய பூமியிலே…
மண்ணோட மனுஷன் மனசு இணையும்…
மகத்துவம் வருமா சொல்லுபுள்ள…

பெண் : மண்ணு விளைஞ்சாலே…
அது வேனாங்குதா மாமா…
கையில் பொண்ணு நிறைஞ்சாலே…
அது பொல்லாததா மாமா…

ஆண் : விஞ்ஞான காலத்தில் எல்லாமே மிஷினு…
மனுஷன் மனசு கூட மிஷின் ஆகிபோச்சு போ புள்ள…

பெண் : ஏத்தமையா ஏத்தம்…
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்…
ஏத்தமையா ஏத்தம்…
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்…

பெண் : எங்கப்பன் உன்பாட்டன் முப்பாட்டன் சொத்திருக்கு…
ஏத்தமையா ஏத்தம்…
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்…
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்…

ஆண் : ஏலோலங்கடி ஏத்தம் ரொம்ப ஏத்தம்…
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்…
ஏத்தம் ரொம்ப ஏத்தம்…
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்…


Notes : Aethamayya Aetham Song Lyrics in Tamil. This Song from Ninaive Oru Sangeetham (1987). Song Lyrics penned by Ilaiyaraaja. ஏத்தமையா ஏத்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading