அடி என்னடி ராக்கம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்பட்டிக்காடா பட்டணமா

Adi Ennadi Rakkamma Song Lyrics in Tamil


ஆண் : அடி ராக்கு என் மூக்கு…
என் கண்ணு என் பல்லு…
என் ராஜாயி…

—BGM—

ஆண் : அடி என்னடி ராக்கம்மா…
பல்லாக்கு நெளிப்பு…
என் நெஞ்சி குலுங்குதடி…

ஆண் : சிறு கண்ணாடி மூக்குத்தி…
மாணிக்க சிவப்பு…
மச்சானை இழுக்குதடி…

—BGM—

ஆண் : அடி என்னடி ராக்கு…

—BGM—

ஆண் : அடி என்னடி ராக்கம்மா…
பல்லாக்கு நெளிப்பு…
என் நெஞ்சி குலுங்குதடி…

ஆண் : சிறு கண்ணாடி மூக்குத்தி…
மாணிக்க சிவப்பு…
மச்சானை இழுக்குதடி…

—BGM—

ஆண் : அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை…
உன் கழுத்துக்கு பொருத்தமடி…
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை…
உன் கழுத்துக்கு பொருத்தமடி…

ஆண் : அம்மூரு மீனாட்சி பாத்தாலும்…
அவ கண்ணுக்கு வருத்தமடி…
அஹா… அம்மூரு மீனாட்சி பாத்தாலும்…
அவ கண்ணுக்கு வருத்தமடி…

ஆண் : சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து…
என் கையாலே கட்டி விடவா…
என் அத்த அவ பெத்த என் சொத்தே…
அடி ராக்கம்மா கொத்தோட முத்து தரவோ…

ஆண் : அடி என்னடி ராக்கம்மா…
பல்லாக்கு நெளிப்பு…
என் நெஞ்சி குலுங்குதடி…

ஆண் : சிறு கண்ணாடி மூக்குத்தி…
மாணிக்க சிவப்பு…
மச்சானை இழுக்குதடி…

—BGM—

ஆண் : தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி…
நம்ம கதையிலே இருக்குதடி…
தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி…
நம்ம கதையிலே இருக்குதடி…

ஆண் : சிங்கார மதுரையின் வெள்ளையம்மா…
கதை தினம் தினம் நடக்குதடி…
அஹா… சிங்கார மதுரையின் வெள்ளையம்மா…
கதை தினம் தினம் நடக்குதடி…

ஆண் : அடி தப்பாமல் நான் உன்னை…
சிறை எடுப்பேன்…
ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே…

ஆண் : என் கண்ணு என் மூக்கு…
என் பல்லு… என் ராஜாயி…
கல்யாண வைபோகமே…

ஆண் : அட பிபிபி டும்டும்டும்…
பிபிபி டும்டும்டும்…
பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும்…

ஆண் : அட பிபிபி பிபிபி டும்டும்டும்…
பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும்…

—BGM—


Notes : Adi Ennadi Rakkamma Song Lyrics in Tamil. This Song from Pattikada Pattanama (1972). Song Lyrics penned by Kannadasan. அடி என்னடி ராக்கம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading