அடியாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முருகன் மந்திரம்அந்தோனி தாசன் & சிந்துரி விஷால்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Adi Aathi Song Lyrics in Tamil


BGM

ஆண் & பெண் : சின்ன மொட்டு ஒன்னு பூத்து…
இப்ப வெட்கப்படும் ஜோரு…
வண்ண பொட்டு வச்சி பூவு வச்சி…
நிக்கிறத பாரு…

ஆண் & பெண் : வாழ மர தோரணமா…
வாச நட பாதைங்க…
சீர் வரிச ஊர்வலமா…
சொந்த பந்தம் சேருங்க…

ஆண் & பெண் : கூடி வாங்க பொண்ணுகளே…
கொலவய போட்டு ஆடுங்க…
மாடி வீடு கட்டித்தரும்…
மாப்பிள்ள வேணுன்னு கேளுங்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பளபளப்பும் கூடிச்சா…
மினுமினுப்பும் ஏறிச்சா…
கண்ணாடியில் உன்ன நீயும்…
பாக்கிறப்போம் தோனிச்சா…

பெண் : பத்திரமா இருந்துக்க…
பக்குவமா நடந்துக்க…
கண்ட கண்ணும் பட்டா தப்பு…
கண்மணியே ஏத்துக்க…
கண்ணத்துல பூத்துக்க…

பெண் : அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…
அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…

BGM

பெண் : ஊராடுற வாய கொஞ்சம் உள்ள பூட்டி வையி…
வாலாட்டுற வேலையெல்லாம் வேணா தள்ளி வையி…

பெண் : காலாடுற கொலுசுக்குத்தான் பூத்த கத சொல்லு…
மேலாடுற சட்ட துணிய லூசா தைக்க சொல்லு…

BGM

ஆண் : சாத்திரத்த சொல்லி உன்ன…
பூட்டி வைக்கும் ஊரு…
ஏத்துக்காத பெண்ணே நீயும்…
எதித்து கேள்வி கேளு…

ஆண் : உண்மையிலே பெண்ணிந்தான் படைக்கிற கடவுள்…
ஆணக்கூட பொம்பளதான் சுமக்கணும் கருவில்…

ஆண் : தீட்டு என்று தள்ளி வைக்கும்…
குழு : வேலையத்த ஊரு…
ஆண் : சாத்திரத்த கொள்ளி வச்சி…
பெண் : உன் வேலைய பாரு…

பெண் : அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…

பெண் : பளபளப்பும் கூடிச்சா…
மினுமினுப்பும் ஏறிச்சா…
கண்ணாடியில் உன்ன நீயும்…
பாக்கிறப்போம் தோனிச்சா…

பெண் : பத்திரமா இருந்துக்க…
பக்குவமா நடந்துக்க…
கண்ட கண்ணும் பட்டா தப்பு…
கண்மணியே ஏத்துக்க…
கண்ணத்துல பூத்துக்க…

பெண் : அடியாத்தி அடியாத்தி…
யே… அடியாத்தி அடியாத்தி…


Notes : Adi Aathi Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Murugan Manthiram. அடியாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading