ஆயிரம் மலர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்ஜென்சி அந்தோணி, எஸ். பி. சைலஜா & மலேசியா வாசுதேவன்இளையராஜாநிறம் மாறாத பூக்கள்

Aayiram Malargale Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…

பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்…
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்…
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ…

பெண் : ராகங்கள் நூறு பாவங்கள் நூறு…
என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ…

பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…

BGM

பெண் : கோடையில் மழை வரும் வசந்தக் காலம் மாறலாம்…
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ…
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்…
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ…

பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…

BGM

ஆண் : பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே…
மலையின் மீது ரதி உலாவும் நேரமே…
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்…
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ…

பெண் : ஆயிரம்…
ஆண் : மலர்களே…
ஆண் & பெண் : மலருங்கள்…

ஆண் & பெண் : அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…

ஆண் & பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்…


Notes : Aayiram Malargale Song Lyrics in Tamil. This Song from Niram Maratha Pookkal (1979). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆயிரம் மலர்களே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading