ஆவி பறக்கும் டீ கட

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவி.எம். மகாலிங்கம் & படவா கோபிடி. இமான்ரஜினிமுருகன்

Aavi Parakkum Teakadai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆவி… ஆ ஆ ஆவி…

ஆண் : ஆவி பறக்கும் டீ கட…
அவ வந்ததனால பூக்கட…
தேவி தினுசா பாத்திட…
நான் மறந்தே போனேன் சாப்பிட…

ஆண் : காதல் என்னும் டீயில…
நெஞ்ச பண்ணா நெனச்சிட்டா…
தேடி வந்த தேவதை…
என்ன நேக்கா குடிச்சிட்டா…

ஆண் : நேத்து வரைக்கும் நானும்தான்…
ஆகாம இருந்தேன் போனியா…
அவ பாத்து சிாிச்ச பிறகுதான்…
ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா…

ஆண் : ஆவி… ஆ ஆ ஆவி…

ஆண் : ஆவி பறக்கும் டீ கட…
அவ வந்ததனால பூக்கட…
தேவி தினுசா பாத்திட…
நான் மறந்தே போனேன் சாப்பிட…

BGM

ஆண் : காதல் என்பது டபரா செட்டு…
காலந்தோறுமே பிாியாது…
ஆசை என்பது பலகார தட்டு…
மூடி வெய்க்கவும் முடியாது…

ஆண் : சூட ஏத்தும் பாய்லரா…
அவளது மேனியும் தோணுதே…
சுக்கு மல்லி காபியா…
அவளது வாசன வீசுதே…

ஆண் : அவ பேச்சு செம டேஸ்டு…
நெனச்சாலே அது பூஸ்ட்டு…
கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு…

ஆண் : ஆவி பறக்கும் டீ கட…
அவ வந்ததனால பூக்கட…

பெண் : கொழந்த ஏன் அழறது…
ரஜினி முருகன் டீய குடிக்க சொல்லு…

BGM

ஆண் : வாய் மணக்க தாம்பூலம் சிறக்க…
உடல் சுறுசுறுப்புக்கு…
சூடான சுவையான ஸ்ட்ராங்கான…
ரஜினிமுருகன் டீ…
எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை…

ஆண் : கன்னி தீவப் போல் தொடரும் லவ்வ…
டெய்லி பேப்பரா படிச்சேனே…
உப்பு பிஸ்கட்டா அவளும் என்ன…
தொட்டு திங்கவே உடைஞ்சேனே…

ஆண் : ஜாடை காட்டும் கண்ணுதான்…
பழகிட டோக்கனும் வாங்குதே…
மூட மாத்தும் சொல்லுதான்…
மனசையும் பாா்சலு போடுதே…

ஆண் : அவ தொட்டு தரும் கிளாசு…
அதிலேதான் உயிா் டோசு…
பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு…

ஆண் : ஓடுங்க ஓடுங்க மிஸ்டா் ஜேக்…
அந்த கொடிய மிருகம்…
நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு…

ஆண் : ஆவி பறக்கும் டீ கட…
அவ வந்ததனால பூக்கட…
தேவி தினுசா பாத்திட…
நான் மறந்தே போனேன் சாப்பிட…

ஆண் : ஆவி…
நம்பி வாங்க சந்தோசமா போங்க…


Notes : Aavi Parakkum Teakadai Song Lyrics in Tamil. This Song from Rajinimurugan (2015). Song Lyrics penned by Yugabharathi. ஆவி பறக்கும் டீ கட பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top