ஆத்தாடி ஆத்தாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நவீன்எஸ்.எஸ்.தமன்அய்யனார்

Aathadi Aathadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மயங்குறேன்டி மயங்குறேன்டி…
மனசுக்குள்ள வட்ட மிட்டு மயங்குறேன்டி…
நொறுங்குறேன்டி நொறுங்குறேன்டி…
கனவுக்குள்ள சிக்கிக்கிட்டு நொறுங்குறேன்டி…
ஏங்குறேன்டி ஏங்குறேன்டி…
தனிமையில் புத்தி கேட்டு ஏங்குறேன்டி…

—BGM—

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி…
உன்னைத்தேடி உன்னைத்தேடி திசைமாறிப் போனேன்டி…

—BGM—

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேன்டி…
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைத்தேடி வந்தேன்டி…
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் வாயேன்டி…
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி…
தரையில் வந்தால் ஏந்திக் கொள்ளடி… அடி அடி அடி…

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவ நீதான்டி…
ஆத்தாடி ஆத்தாடி உனக்கென பிறந்தவன் நான்தான்டி…
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தடி…
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவ நீதான்டி…

—BGM—

ஆண் : தினம் படுத்தும் கண்கள் எங்கும்…
பெண்ணே உன் முகம் தோன்றுதடி…
மயங்குறேன்டி மயங்குறேன்டி மனசுக்குள்ள மனசுக்குள்ள…

ஆண் : தினம் படுத்தும் கண்கள் எங்கும்…
பெண்ணே உன் முகம் தோன்றுதடி…
தினம் நடக்கையில் என் நிழல்…
உந்தன் பின்னால் தானே ஓடுதடி…

ஆண் : விரும்புறேன்டி விரும்புறேன்டி…
உன்னால் என்னை விரும்புறேன்டி…
திரும்புறேன்டி திரும்புறேன்டி…
உந்தன் வழி திரும்புறேன்டி…
துடிக்குறேன்டி துடிக்குறேன்டி மனசுக்குள்ள நீ… அடி அடி அடி…

—BGM—

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தடி…
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவ நீதான்டி…

—BGM—

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி…
ஊஞ்சலாடி மனசுக்குள்ள பறந்தவ நீதான்டி…
பெண் : கொஞ்சம் கண்களால் பாரடி சம்மதம் சொல்லடி…

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேன்டி…
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைத்தேடி வந்தேன்டி…
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் வாயேன்டி…
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி…
தரையில் வந்தால் ஏந்திக் கொள்ளடி… அடி அடி அடி…

பெண் : ஆத்தாடி ஆத்தாடி உனக்கெனப் பிறந்தவன் இவன்தான்டி…
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து உனக்கென வந்தான்டி…

பெண் : ஆத்தாடி…


Notes : Aathadi Aathadi Song Lyrics in Tamil. This Song from Ayyanar (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஆத்தாடி ஆத்தாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading