ஆரிரோ ஆராரிரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்தெய்வத்திருமகள்

Aariro Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்…
ஓஓ… இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்…

ஆண் : இரு உயிர் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிர் ஆகுதே…
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

—BGM—

ஆண் : முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே…
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே…
வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே…
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே…
இது போல் ஆனந்தம் வேறில்லையே…

ஆண் : இரு மனம் ஒன்று சோ்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே…
ஒரு நொடி போதும் போதும் என்று ஓா் குரல் கேட்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

—BGM—

ஆண் : கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்…
கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள்…
அடடா… தெய்வம் இங்கே வரம் ஆனதே…
அழகாய் வீட்டில் விளையாடுதே…
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே…

ஆண் : கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே…
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

—BGM—

Notes : Aariro Song Lyrics in Tamil. This Song from Deiva Thiirumagal (2011). Song Lyrics penned by Na. Muthukumar. ஆரிரோ ஆராரிரோ பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading