ஆண்டே நூற்றாண்டே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநவீன்தேவாமுகவரி

Aande Nootrande Song Lyrics in Tamil


BGM

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…
ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : ஆண்டே நூற்றாண்டே…
உண்டாகும் நூற்றாண்டே…
வையகம் வாழ விடு…
எங்கள் வாசலில் கோலம் இடு…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வெப்பம் இல்லாமல்…
சுக வெளிச்சம் நீ தர வா…
வெள்ளம் இல்லாமல்…
மழை மேகம் நீ தர வா…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : சதைகள் இல்லாமல்…
தேக திசுக்கல் நீ தரவா…
இரைச்சல் இல்லாமல்…
காதில் இன்னிசை நீ தரவா…

ஆண் : நிலவுக்கு போய் வரவே…
எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு…
ஒவ்வொரு விடியலிலும்…
நெஞ்சில் உழைப்புக்கு வலிமை கொடு…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…
ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

BGM

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…
ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : நூற்றாண்டே நூற்றாண்டே…
நோய்கள் எல்லாம் களைவாயா…
அழுக்கில்லாத காற்றும் நீரும்…
அகிலம் முழுதும் தருவாயா…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : பெட்ரோலும் தீர்ந்துவிட்டால்…
கற்காலம் தருவாயா…
பொன்னான வாகனம் ஓடும்…
பொற்காலம் தருவாயா…

ஆண் : ஒரே நிழல் ஒரே நிஜம்…
நீ கொண்டு வா நீ கொண்டு வா…
ஒரே பகல் ஒரே நிலை…
நீ கொண்டு வா நீ கொண்டு வா…

ஆண் : பொய்யே பேசாத
புத்துலகம் நீ கொண்டு வா…
பசி இல்லாத பொய் சொல்லாத…
புது உலகம் நீ கொண்டு வா…
ஒரு பூகம்பம் எங்கும் நேராத…
அனல் பூமியை நீ கொண்டு வா…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…
ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

BGM

ஆண் : இல்லறத்தில் பெண்களுக்கு…
இன்பநிலை தருவாயா…
சமையல் அறை ஒழிந்த வீடுகள்…
தாய்மாருக்கெல்லாம் தருவாயா…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : பொதி சுமக்கும் குழந்தைகளின்…
புத்தகங்கள் குறைப்பாயா…
பரீட்சையின்றி கல்வியும் வேண்டும்…
பாடத்திட்டம் தருவாயா…

ஆண் : ஒரே மொழி ஒரே நீதி…
நீ கொண்டு வா நீ கொண்டு வா…
ஒரே நிலா ஒரே விழா…
நீ கொண்டு வா நீ கொண்டு வா…

ஆண் : போரே இல்லாத…
பொன் உலகம் நீ கொண்டு வா…
பணம் பாராமல் மனம் பார்க்கின்ற…
அந்த காதல் நீ கொண்டு வா…
இசை கேக்காமல் கண் துகிலாத…
அட உலகம் நீ கொண்டு வா…

ஆண் : புத்தம் புது ஆண்டே…
தேன் பூக்கும் நூற்றாண்டே…
பூக்கள் நீ தரவா…
தேன் புன்னகை நீ தரவா…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : போர்க்களம் நுழைந்துவிடு…
அங்கே பூச்சரம் நட்டுவிடு…
அணுகுண்டு அத்தனையும்…
பசிபிக் கடலில் கொட்டிவிடு…

குழு : ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா…

ஆண் : மனிதர்கள் விரும்பும்வரை…
மண்ணில் மனிதரை வாழவிடு…
மருத்துவம் இல்லாமல்…
எங்கள் மானுடம் வாழவிடு…

ஆண் : நிலவுக்கும் போய் வரவே…
எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு…
ஒவ்வொரு விடியலிலும்…
நெஞ்சில் உழைப்புக்கு வலிமை கொடு…

குழு : வெல்கம் கம் கம் வெல்கம் கம் கம் 21 சென்சுரி…
வெல்கம் கம் கம் வெல்கம் கம் கம் 21 சென்சுரி…
வெல்கம் கம் கம் வெல்கம் கம் கம் 21 சென்சுரி…
வெல்கம் கம் கம் வெல்கம் கம் கம் 21 சென்சுரி…


Notes : Aande Nootrande Song Lyrics in Tamil. This Song from Mugavaree (2000). Song Lyrics penned by Vairamuthu. ஆண்டே நூற்றாண்டே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading