ஆகாயம் பூமி எங்கும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய சாகர்ரோஷினிஎஸ்.எஸ்.தமன்அருவம்

Aagayam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆகாயம் பூமி எங்கும்…
ஆனந்த வாசம் வந்ததே…
அனுமதியே கேளாமல்…
மூச்சு காற்றில் பாஷை வந்ததே…

பெண் : கிண்டல் கேலிகள் நின்றதே…
கொண்ட சோகமும் சென்றதே…
என்னை ஆனந்தம் தின்றதே…
இன்பம் ஆரம்பம் என்றதே…

பெண் : தடைகள் மீறி படிகள் ஏறி…
சிறகு இன்று பறந்து செல்லுதே…
விதியை வென்று வழிகள் கண்டு…
எதையும் தாங்கும் இதயம் வந்ததே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆகாயம் பூமி எங்கும்…
ஆனந்த வாசம் வந்ததே…
அனுமதியே கேளாமல்…
மூச்சு காற்றில் பாஷை வந்ததே…

—BGM—

பெண் : ஆத்தாடி எந்தன் கால்கள்…
ஆட்டம் போடுதே…
கூத்தாடும் குருவி நூறு…
கூட்டம் கூடுதே…

பெண் : இன்று பாடம் சொல்ல பள்ளிக்கூடம்…
கூட இல்லையே…
இந்த சேவை செய்யும் போது இன்பம்…
எல்லை இல்லையே…

பெண் : அம்மாடி ஆனந்தம்…
கண்ணை கட்டுதே…
கும்மாளம் இட்டு ஆசை…
கும்மி கொட்டுதே…

பெண் : அன்றாடமே அன்பால் ஒரு…
சம்பாத்தியம் நாமும் செய்வோம்…
நன்றாகவே நாம் வாழவே…
நற்சேவைகள் நாளும் செய்வோம்…

பெண் : வா… வா…

பெண் : ஜரிகை பட்டு சேலை போல…
சென்னை நகர சாலை மின்னுதே…
ஜல்லிக்கட்டு காளை போல…
எல்லை மீறி உள்ளம் துள்ளுதே…

பெண் : ஆகாயம் பூமி எங்கும்…
ஆனந்த வாசம் வந்ததே…
அனுமதியே கேளாமல்…
மூச்சு காற்றில் பாஷை வந்ததே…

—BGM—


Notes : Aagayam Song Lyrics in Tamil. This Song from Aruvam (2019). Song Lyrics penned by Vijaya Saagar. ஆகாயம் பூமி எங்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading