ஏடி கள்ளச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் பிரகாஷ் & ஸ்ரேயா கோஷல்என்.ஆர். ரகுநந்தன்தென்மேற்குப் பருவக்காற்று

Yedi Kallachi Song Lyrics in Tamil


ஆண் : ஏடி கள்ளச்சி…
என்ன தெரியலையா…
போடி வெள்ளச்சி…
என்ன புரியலையா…

ஆண் : நெஞ்சில் நொங்குது நொங்குது உன்ன…
உன் கால் ரெண்டும் போகுது பின்ன…
நான் முத்தம் போட துடிக்கிறேன் உன்ன…
நீ முள்ள காட்டி அடிக்கிற கண்ண…

ஆண் : நீ காய்தானா…
பழம்தானா…
சொன்னால் என்ன…

ஆண் : ஏடி கள்ளச்சி…
என்ன தெரியலையா…
போடி வெள்ளச்சி…
என்ன புரியலையா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஓ… அத்தமகன் போல வந்து…
அங்க இங்க மேய்வ…
அத்து வான காட்டில் விட்டு…
அத்துக்கிட்டு போவ…

ஆண் : முள்ளு தைச்ச ஆடு போல…
நெஞ்சு குழி நோக…
முட்டையிட்ட காடாய் இங்கே…
காட்டை விட்டு போக…

பெண் : கிடை ஆட்டு கோமியம் கூட…
ஒரு ஆறு ஆசை வரும்…
கிறுக்கேற்றும் ஆம்பள சொல்லும்…
மறுநாளே மாறிவிடும்…

ஆண் : நான் பொம்பள கிறுக்குல வல்ல…
என் புத்தியில் வேர் ஒன்னும் இல்ல…
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள…
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல…

பெண் : நீ வெறும் வாயா மெல்லாத…
வெளையாட்டில…

ஆண் : ஏடி கள்ளச்சி…
என்ன தெரியலையா…
போடி வெள்ளச்சி…
என்ன புரியலையா…

BGM

ஆண் : ஆண்டிபட்டி தாலுக்காவில்…
பொம்பளைக்கா பஞ்சம்…
ஆக மொத்தம் உன்ன கண்டு…
ஆடி போச்சு நெஞ்சம்…

பெண் : பித்தம் கொஞ்சம் கூடி போனா…
இப்படித்தான் கெஞ்சும்…
சத்தம் போடும் நெஞ்சு கூட்ட…
சாத்தி வையி கொஞ்சம்…

ஆண் : கோடி ஓடும் சக்கர வள்ளி…
தெரியாம கிழங்கு வைக்கும்…
அது போல பொம்பள சாதி…
அறியாம மனச வைக்கும்…

பெண் : நீ பட்டுனு முன்ன வந்து நில்லு…
என் பொட்டுல அடிச்சு நீ சொல்லு…
இனி நமக்குள்ள எதுக்கு என் முள்ளு…
அட நாவுக்கு தூரம் இல்ல பள்ளு…

ஆண் : நா முடி போட…
ரெடி தாண்டி…
முடிவ சொல்லு…

ஆண் : ஏடி கள்ளச்சி…
என்ன தெரியலையா…
போடி வெள்ளச்சி…
என்ன புரியலையா…


Notes : Yedi Kallachi Song Lyrics in Tamil. This Song from Thenmerku Paruvakaatru (2010). Song Lyrics penned by Vairamuthu. ஏடி கள்ளச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading