யாரோ இவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா.முத்துக்குமார்சைந்தவி & ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்உதயம் என் எச் 4

Yaaro Ivan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…

ஆண் : உன் காதலில் கரைகின்றவன்…
உன் பாா்வையில் உறைகின்றவன்…
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்…

பெண் : என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…

—BGM—

ஆண் : எங்கே உன்னை கூட்டிச்செல்ல…
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல…

பெண் : என் பெண்மையும் இளைப்பாறவே…
உன் மாா்பிலே இடம் போதுமே…

ஆண் : ஏன் இன்று இடைவெளி குறைகிறதே…

பெண் : மெதுவாக இதயங்கள் இணைகிறதே…

ஆண் : உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே…

பெண் : யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…

—BGM—

பெண் : உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்…
என் நாணங்கள் ஏன் தோற்குதோ…

ஆண் : உன் வாசனை வரும் வேளையில்…
என் யோசனை ஏன் மாறுதோ…

பெண் : நதியினில் ஒரு இலை விழுகிறதே…

ஆண் : அலைகளில் மிதந்தது தவழ்கிறதே…

பெண் : கரைசேருமா உன் கைசேருமா எதிா்காலமே…

—BGM—

பெண் : எனக்காகவே பிறந்தான் இவன்…
எனை காக்கவே வருவான் இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…

பெண் : என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…

—BGM—


Notes : Yaaro Ivan Song Lyrics in Tamil. This Song from Udhayam NH4 (2014). Song Lyrics penned by Na. Muthukumar. யாரோ இவன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading