உச்சந்தலை ரேகையில

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஶ்ரீராம்கார்த்திக் ராஜாபிசாசு 2

Uchanthala Regaiyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…

ஆண் : கன்னக்குழி பல்லக்குல…
துள்ளி குதிச்சோம்…
வெட்டிகிளி சத்தத்துல…
மெட்டு புடிச்சோம்… ஓஹோம்… ஓஹோம்…

ஆண் : போகும் வழியிலே…
ரெண்டு பாதை இணையுதே…
ஒரு மண்ணு பானையாய்…
அட மனசு உடையுதே…

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…

—BGM—

ஆண் : ஏ… ஹே… பொன்வண்டு கை ஏந்துது…
வண்ணம் கேட்டுதான்…
அல்லித்தண்டு நீர் கேக்குது தாகமா…

ஆண் : ரயிலு வண்டி கூட நடக்குது…
பேச்சு துணைக்குத்தான்…
குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா…

ஆண் : உச்சியில மேகமா…
உப்பு மழை ஆகுமா…
கண்மூடி வாழும் மானிடா உண்மை கேளு…

ஆண் : அட ஒத்த பாலம்தான்…
ரெண்டு ஊர சேர்க்குது…
அட தண்டவாளமா…
இங்கு உறவு பிரியுது…

—BGM—

ஆண் : ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம…
பாக்கு மரம் வெத்தல கேக்குது செவப்பாக…
கீரிப்புள்ள போர்வை தேடுது துணை இல்லாம…
கிளிப்புள்ள ஏலம் போடுது சலிக்காம…

ஆண் : வேருக்குள்ள ஈரமா வெப்பத்துல காயுமா…
பொய்யோடு பேசும் மானிடா உண்மை கேளு…

ஆண் : ரெண்டு கரையும் புடிச்சுதான்…
ஒரு நதியும் நடக்குது…
இங்க விதியை புடிச்சுதான்…
கை வெலகி நடக்குது…

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…

ஆண் : கன்னக்குழி பல்லக்குல…
துள்ளி குதிச்சோம்…
வெட்டிகிளி சத்தத்துல…
மெட்டு புடிச்சோம்… ஓஹோம்… ஓஹோம்…

ஆண் : போகும் வழியிலே…
ரெண்டு பாதை இணையுதே…
ஒரு மண்ணு பானையாய்…
அட மனசு உடையுதே…

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…


Notes : Uchanthala Regaiyile Song Lyrics in Tamil. This Song from Pisasu 2 (2022). Song Lyrics penned by Kabilan. உச்சந்தலை ரேகையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading