யாரது யாரது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரேயா கோஷல்தேவாஇங்கிலீஸ்காரன்

Yaaradhu Yaaradhu Song Lyrics in Tamil


BGM

பெண் : யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…

BGM

பெண் : யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது…
பூக்களா பறவையா நதிகளா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கடலில் நீந்தும் மீனை இன்று…
கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை…
விளக்கின் அடியில் தேங்கி இருக்கும்…
இருட்டை யாரும் பார்ப்பதில்லை…

பெண் : யாரது யாரது யாரது…

பெண் : யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…

BGM

பெண் : ஒரே நிலா தினம் விடாமல் முகம் காட்டுமா…
ஒரே மரம் தினம் நூறாய் நிறம் காட்டுமா…
அதே கடல் தினம் தினம் இசை மீட்டுமா…
அதே விழி கனாக்களை நிதம் மாற்றுமா…

பெண் : தண்ணீரில் தத்தளித்தது…
எறும்புகள் நின்றாலும்…
ஏதோ ஓர் இலை வந்து…
பின்தொடர்ந்து படகாகும்…

பெண் : வெளிச்சம் வரும் வழியை…
நீ சொல் சொல் சொல் சொல்…

பெண் : யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…

BGM

பெண் : மேகங்களே மழை நினைய திரை செய்யுமா…
மரங்களே மைனாவுக்கு ஓர் வலை ஆகுமா…
பட்டாம்பூச்சி ரயில் தடம் மேலே பறக்குமா…
வேரின் மேலே வெந்நீர் விட்டால் பூ பூபோக்குமா…

பெண் : வெயில் தரும் புழுக்கமெல்லாம்…
மழை வர வழி வகுக்கும்…
வலி தரும் பெருஞ்சுமைதான்…
மழலைக்கு வழி வகுக்கும்…

பெண் : வெளிச்சம் வரும் வழியை…
நீ சொல் சொல் சொல் சொல்…

பெண் : யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது…
பூக்களா பறவையா நதிகளா…

பெண் : கடலில் நீந்தும் மீனை இன்று…
கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை…
விளக்கின் அடியில் தேங்கி இருக்கும்…
இருட்டை யாரும் பார்ப்பதில்லை…

பெண் : யாரது யாரது யாரது…

பெண் : யாரது… யாரது…
நி ச நி ச க… நி ச நி ச க…
ச க ச க ம… ச க ச க ப ம க ம க ரி…

பெண் : யாரது… யாரது…
க ம ப ம ப ம க ம க ரி க ச…
க ம ப ம ப நி த நி ச நி த ம க ரி…

பெண் : யாரது… யாரது…
த ம ப நி த ம ப நி த ம ப நி…
நி ச நி ச நி ச நி ச…
க ரி ச நி த நி த ப ம க ரி ச…

பெண் : யாரது… யாரது…
ப த நி ம நி ச க ரி நி ப…
ப த நி ரி ச நி ப ம க ரி ச நி…

BGM


Notes : Yaaradhu Yaaradhu Song Lyrics in Tamil. This Song from Englishkaran (2005). Song Lyrics penned by Na. Muthukumar. யாரது யாரது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading