யானை முட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஷாக்ஷி ஹரேந்திரன் & ஆனந்திதீசன்மங்கை

Yaana Mutta Song Lyrics in Tamil


BGM

பெண் : யானை முட்ட காம்புல…
நவா பழம் கருவில…
நத்த குட்டி காத்துல…
ஆம குஞ்சு மரத்துல…

பெண் : தங்கம் அலையில…
சிங்கம் வலையில…
சீனி மலையில…
ஏறி நிக்கையில…

பெண் : மீனு கரையில மானு கடலுல…
காத்த புடிக்கிறோம் கண்ட கனவுல…

பெண் : உன்ன கிள்ளி என்ன கிள்ளி…
ஓட தண்ணி ஓடுதே…
சந்தோஷமா சந்தோஷமா…
ஊதா கிளி பாடுதே…

BGM

பெண் : மோதிர விரலில் மோதுற கண்ணுக்கு…
தடயம் எதுவும் காணலியே…
மங்கள கயித்த மாட்டாத கழுத்து…
உறவ இன்னும் சேரலியே…

பெண் : கண்ணுல மந்தனம் இல்லதா ரெண்டுக்கும்…
கல்யாணம் இன்னும் ஆகலியே…

பெண் : தொட்டு தொட்டு பேசும் ஓரசல் எதுவும் இல்ல…
விட்டு விட்டு பறக்கும் சரசம் எதுவும் இல்ல…
காமதேவன் தொடுத்த கணையும் பொழியவில்லை…
காதல் ஜோடி காண அம்சம் தெரியவில்ல…

பெண் : மேடு பள்ள வாழ்க்கையில ஏகப்பட்ட தப்பிருக்கும்…
காத்து நிக்க நட்பிருக்கும் அப்பன் போல நட்புங்க…
மானுடத்த வாழ வைக்க பெண்டவனே தந்த வரம்…
பாலினித்த தாண்டி வரும் நம்ம உயிர் நட்புங்க…

BGM

பெண் : எல்லோருக்கும் பெய்யும் மழை…
எங்கள் மண்ணில் வீழுமே…
அன்பின் கண்ணில் குறையில்லை நிறைகுடமே…

பெண் : முக்கால் நிலா இல்லா விட்டால்…
பிள்ளை அல்லா வானமே…
அங்கே பிறை ரசிப்பது எங்கள் குணமே…

பெண் : கண்ணுக்கெட்டும் தூரமே…
உன்னை இருள் சூழுமே…
சின்னப் பொறி போதுமே…
விடியும் எல்லாமே…

பெண் : உச்சிக் கிளை காயங்கள்…
மெட்டுக் கட்டி பாடினால்…
மெச்சிக் குயில் ஆக்குமே உலகம் தன்னாலே…

பெண் : நீயும் ஒரு பாகம்தான்…
நானும் ஒரு பாகம்தான்…
அன்பில் வழி சேர்ந்தே மணங்கள் எல்லாமே…

பெண் : சிந்திய ரத்தத்தில் ரத்தின கம்பளம்…
செய்திட பார்க்குது பாதங்களே…

பெண் : சிந்திய ரத்தத்தில் ரத்தின கம்பளம்…
செய்திட பார்க்குது பாதங்களே…
பந்தய ஓட்டத்தில் பக்கத்தில் உள்ளவன்…
கைகளை கோர்க்குது பாசங்களே…

BGM


Notes : Yaana Mutta Song Lyrics in Tamil. This Song from Mangai (2024). Song Lyrics penned by Vivek. யானை முட்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading