வைகறையில் வந்ததென்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாவான்மதி

Vaigarayil Vanthathenna Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…

பெண் : நித்தம் சாயங்கால நேரம்…
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்…
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்…
மழை சாரல் வீச வேண்டும்…

ஆண் : இதுபோல் தொடரும் இந்த காதல் கதை…
காலம் உள்ள காலம் வரை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…

BGM

ஆண் : இதுதான்…
குழு : பருவம் தினம் பயிலும்…
இதழ் உரசும் இந்த சரசம்…

பெண் : இதமாய்…
குழு : நழுவும் இந்த தருணம்…
வந்த விரகம் மெல்ல விலகும்…

ஆண் : முத்தங்கள் ஒவ்வொன்றும் முத்துப்போல் பதிக்க…
பெண் : கன்னங்கள் ஒவ்வொன்றும் தென்னங்கள் வடிக்க…

ஆண் : ஹோய்… பக்கம் வரும் போது…
அள்ளிக் கொடு பட்டுப் படித்தேனே…

பெண் : தொட்டுத் தழுவாது…
அந்தி பகல் பித்து பிடித்தேனே…

ஆண் : உன்னை நான் தொட…
என்னை நீ தொட எதிர்பார்த்திருந்தாயோ…

பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…

BGM

ஆண் : பல நாள்…
குழு : இரவில் பனி நிலவில்…
இவள் இளைத்தாள் உந்தன் நினைவில்…

பெண் : அடடா…
குழு : இது போல் ஒரு சபலம்…
ஒரு சலனம் சில சமயம்…

ஆண் : ஒட்டிக்கொள் கட்டிக்கொள் உன்னில் நான் கலக்க…
பெண் : அம்மம்மா அச்சம்தான் என்னென்று விளக்க…

ஆண் : பள்ளியறைப் பாட்டின்…
பல்லவியை சொல்லித் தரலாமா…

பெண் : ஆ… சொல்லித்தரும் போது…
சின்ன இடை துன்ப படலாமா…

ஆண் : ஹ்ம்ம்… மிச்சம் மீதியும் மத்த சேதியும்…
முதல் ராத்திரிதானா…

பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…

ஆண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…

பெண் : நித்தம் சாயங்கால நேரம்…
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்…
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்…
மழை சாரல் வீச வேண்டும்…

ஆண் : இதுபோல் தொடரும் இந்த காதல் கதை…
காலம் உள்ள காலம் வரை…

பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி…
ஆண் : கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…


Notes : Vaigarayil Vanthathenna Song Lyrics in Tamil. This Song from Vaanmathi (1996). Song Lyrics penned by Vaali. வைகறையில் வந்ததென்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading