உயிரிலே எனது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமகாலட்சுமி ஐயர் & ஸ்ரீனிவாஸ்ஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Uyiriley Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்…
கானல் நீரோடு சேர்கிறாய்…
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை…
திருப்பி நான் வாங்க மாட்டேனே…

பெண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

BGM

ஆண் : அருகினில் உள்ள தூரமே…
அலை கடல் தீண்டும் வானமே…
நேசிக்க நெஞ்சம் ரெண்டு…
போதாதா போதாதா நீ சொல்லு…
நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு…

பெண் : இது நடந்திட கூடுமோ…
இரு துருவங்கள் சேருமா…
உச்சரித்து நீயும் விலக…
தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ…

ஆண் : உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…

பெண் : உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…

BGM

பெண் : ஏதோ ஒன்று என்னை தடுக்குதே…
பெண் தானே நீ என்று முறைக்குதே…
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே…
விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே…

ஆண் : வா வந்து என்னை சேர்ந்திடு…
என் தோள்களில் தேய்ந்திடு…
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்…
வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்…

BGM

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்…
கானல் நீரோடு சேர்கிறாய்…
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை…
திருப்பி நான் வாங்க மாட்டேனே…

BGM


Notes : Uyiriley Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. உயிரிலே எனது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading