உப்பு கல்லு தண்ணீருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபாம்பே ஜெயஸ்ரீதினாகருப்பசாமி குத்தகைதாரர்

Uppu Kallu Thanneerukku Song Lyrics in Tamil


BGM

பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது…
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது…
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுகிட்டது…

பெண் : தேதி தாள போல வீணே…
நாளும் கிழியறேன் நான்…
தேர்வு தாள கண்ணீரால…
ஏனோ எழுதறேன்…

பெண் : இது கனவா… இல்லை நெஜமா…
தற்செயலா… தாய் செயலா…
நானும் இங்கு நானும் இல்லையே…

பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது…
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுக்கிட்டது

BGM

பெண் : ஏதும் இல்லை வண்ணம் என்று…
நானும் வாடினேனே…
ஏழு வண்ண வானவில்லாய்…
என்னை மாற்றினாய்…

பெண் : தாயும் இல்லை என்று உள்ளம்…
நேற்று ஏங்கினேனே…
தேடி வந்து நெய்த அன்பால்…
நெஞ்சை தாக்கினாய்…

பெண் : கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள்…
உன் கண்கள் செய்த வைத்தியத்தால்…
நன்மை அடைகிறேன்…

பெண் : மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள்…
உன் நிழல் கொடுத்த தைரியத்தால்…
உண்மை அறிகிறேன்…

பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…

BGM

பெண் : ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது…

BGM

பெண் : மீசை வைத்த அன்னை போல…
உன்னைக் காண்கிறேன்…
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம்…
வேதம் ஆகுதே…

பெண் : பாழடைந்த வீடு போல…
அன்று தோன்றினேன்…
உன் பார்வை பட்ட காரணத்தால்…
கோலம் மாறுதே…

பெண் : கட்டில் உண்டு மெத்தை உண்டு…
ஆன போதிலும்…
உன் பாசம் கண்டு தூங்கவில்லை…
எனது விழிகளே…

பெண் : தென்றல் உண்டு திங்கள் உண்டு…
ஆன போதிலும்…
கண் நாளும் இங்கு தீண்டவில்லை…
உனது நினைவிலே…

பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது…
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது…
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுக்கிட்டது…

பெண் : தேதி தாள போல வீணே…
நாளும் கிழியுறேன் நான்…
தேர்வு தாள கண்ணீரால…
ஏனோ எழுதறேன்…

பெண் : இது கனவா… இல்லை நெஜமா…
தற்செயலா… தாய் செயலா…
நானும் இங்கு நானும் இல்லையே…

பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது…


Notes : Uppu Kallu Thanneerukku Song Lyrics in Tamil. This Song from Karuppusamy Kuththagaithaarar (2007). Song Lyrics penned by Yugabharathi. உப்பு கல்லு தண்ணீருக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading