உன் புன்னகை போதுமடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாபாஸ் மார்க்

Un Punnagai Pothumadi Song Lyrics in Tamil


குழு : இளைய கிளிகளே இன்றும் போலவே இணைந்து வாழ்கவே…
ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா…
புதிய வானத்தில் புதிய பூமியில் பறந்து வாழ்கவே…
ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா…

BGM

ஆண் : உன் புன்னகை போதுமடி…
சில பூக்களும் பூக்குமடி…

ஆண் : உன் புன்னகை போதுமடி…
சில பூக்களும் பூக்குமடி…
உன் பார்வைகள் போதுமடி…
பொன் பௌர்ணமி தோன்றுமடி…
உன் பார்வைகள் போதுமடி…
பொன் பௌர்ணமி தோன்றுமடி…

ஆண் : ஒரு காவியத் தூரிகை தீட்டிய மேனகை…
உனது மேனி வடிவம் என் மனதில் வந்து உலவும்…

ஆண் : உன் புன்னகை போதுமடி…
சில பூக்களும் பூக்குமடி…
உன் புன்னகை போதுமடி…
சில பூக்களும் பூக்குமடி…

BGM

ஆண் : மணமாலை நீ கொள்ளப் போராடினேன்…
மகராணி உனக்காக வாதாடினேன்…

பெண் : ஏனிந்த வாழ்வென்று திண்டாடினேன்…
நீ வந்த பின்னாலே நிறம் மாறினேன்…

ஆண் : எப்போது அல்லி பூக்குமோ நீர் அறியக்கூடும்…
எப்போது காதல் பூக்குமோ யார் அறியக்கூடும்…

பெண் : உரிமைத் தலைவா…
குழு : தலைவா தலைவா…
பெண் : உயிரைத் தரவா…
குழு : தரவா தரவா…

பெண் : இனி நான் ஒரு காகிதம் நீ அதில் காவியம்…
எழுதிக்கொள்க இறைவா…

ஆண் : உன் புன்னகை போதுமடி…
சில பூக்களும் பூக்குமடி…
உன் புன்னகை போதுமடி…
சில பூக்களும் பூக்குமடி…

BGM

பெண் : உன் மார்பில் கண்மூடும் வரம் கேட்கிறேன்…
உன் மூச்சில் நான் கொஞ்சம் உயிர் வாழ்கிறேன்…

ஆண் : மணமாலை நாம் சூட நாள் பார்க்கிறேன்…
மாராப்புக் கலையாமல் தோள் சேர்க்கிறேன்…

பெண் : இப்போது தத்தளிக்கிறாள் இந்த மகராணி…
எப்போது பள்ளி கொள்ளுமோ இளைய மலர்மேனி…

ஆண் : பருவக்கனியே…
குழு : கனியே கனியே…
ஆண் : பன்னீர்க்குளமே…
குழு : குளமே குளமே…

ஆண் : நாம் காட்சிகள் காண்பதும் மோட்சங்கள் போவதும்…
இன்னும் இரண்டு தினமே…

ஆண் : உன் புன்னகை போதுமடி…
சில பூக்களும் பூக்குமடி…
உன் புன்னகை போதுமடி…
சில பூக்களும் பூக்குமடி…

ஆண் : உன் பார்வைகள் போதுமடி…
பொன் பௌர்ணமி தோன்றுமடி…
உன் பார்வைகள் போதுமடி…
பொன் பௌர்ணமி தோன்றுமடி…

ஆண் : ஒரு காவியத் தூரிகை தீட்டிய மேனகை…
உனது மேனி வடிவம் என்மனதில் வந்து உலவும்…

ஆண் : உன் புன்னகை போதுமடி…
சில பூக்களும் பூக்குமடி…
உன் புன்னகை போதுமடி…
சில பூக்களும் பூக்குமடி…


Notes : Un Punnagai Pothumadi Song Lyrics in Tamil. This Song from Pass Mark (1993). Song Lyrics penned by Vairamuthu. உன் புன்னகை போதுமடி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top