உன் நெஞ்சுக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசின்மயிசந்தோஷ் தயாநிதிமதுரவீரன்

Un Nenjukulle Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…
உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…

பெண் : ராசாவே உன்னை கட்டி கொள்ள ஆசையில…
ஆளாகி நின்னேன் கண்ணு முன்னாலே…
எனக்கு ஏத்த ஆம்பள எவனும் இல்ல ஊருல…
காதல காட்டு டா கொஞ்சம் என் மேல…

பெண் : உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…

—BGM—

பெண் : உன் மேல புள்ளி வச்சு சிக்கிக்கிட்டேன் கோலமா…
கையால மீன் குழம்பும் வச்சி தாரேன் போதுமா…
உன் பேர சொல்ல சொல்ல ஆனேனே காரமா…
சும்மா நீ என்னை தின்னு சூடான சாதமா…

பெண் : ஐயா நீ பார்த்தாலே பாலூத்து ஆகி விடும்…
பார்க்காம போனாலே தேகம் நோகும்…
எப்போதும் உன் வாசம் என் உடம்ப மூட வரும்…
அப்போது என்னோடு ஏக்கம் தீரும்…

பெண் : உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…

—BGM—

பெண் : அஞ்சு ஆறு புள்ள குட்டி உன்னை ஒட்டு ஜாடையா…
அஞ்சாம பெத்து எடுக்க என்ன விட்டா யாருயா…
ஜில்லாவே கண்ணு வெக்க உன் கூட ஜோடியா…
பந்தாவா சுத்தி வந்து வாழ்வேனே ராணியா…

பெண் : அண்ணாந்து நான் பார்த்த ஆம்பளையும் யாரும் இல்ல…
உன்னாலே மல்லாந்து சாஞ்சிகிறேன் கீழ…
என்னானு கேட்காம நீ போனா நியாயம் இல்ல…
ஊர் தாண்டி போகாத கோயில் காளை…

பெண் : உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…
உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…

பெண் : ராசாவே உன்னை கட்டி கொள்ள ஆசையில…
ஆளாகி நின்னேன் கண்ணு முன்னாலே…
எனக்கு ஏத்த ஆம்பள எவனும் இல்ல…
ஊருல காதல காட்டு டா கொஞ்சம் என் மேல…

—BGM—


Notes : Un Nenjukulle Song Lyrics in Tamil. This Song from Madura Veeran (2018). Song Lyrics penned by Yugabharathi. உன் நெஞ்சுக்குள்ளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading