கன்னத்தில் கன்னம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாவாட்ச்மேன் வடிவேல்

Kannathil Kannam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க…
ஒத்துக்கோ ஒத்துக்கோ…

பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்…
ஒத்திப்போ ஒத்திப்போ…

ஆண் : இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ…
பெண் : உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பெண்ணெல்லாம் பெண்ணல்ல…
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல…

ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க…
ஒத்துக்கோ ஒத்துக்கோ…

பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்…
ஒத்திப்போ ஒத்திப்போ…

BGM

ஆண் : வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்…
வாசத்தை விட்டு மலரெங்கு விரியும்…
உனக்காக நான் எனக்காக நீ…
உயிர் வாழும் காலம் வரையும்…

பெண் : மோகத்தை விட்டு மனமெங்கு திரியும்…
மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்…
கொடி போல நான் மடிமீதுதான்…
விழும் போது காதல் மலரும்…

ஆண் : உன்னைத்தொடும் தென்றல் வந்து…
என்னைத்தொடுது…
உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது…

பெண் : சந்தித்தேன் அப்போது…
சிந்தித்தேன் இப்போது…
சொந்தங்கள் தப்பாது வா…

ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க…
ஒத்துக்கோ ஒத்துக்கோ…

பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்…
ஒத்திப்போ ஒத்திப்போ…

BGM

பெண் : ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்…
ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்…
இதமாகத்தான் பதமாகத்தான் எனை தீண்டு தாகம் தணியும்…

ஆண் : ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன்…
ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன்…
பழச்சாறையும் இளநீரையும் பரிமாற வேண்டும் தினமும்…

பெண் : அந்திப்பகல் வந்ததொரு இன்ப மயக்கம்…
அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும்…

ஆண் : எங்கெங்கே தொட்டாலும் அம்மம்மா உற்சாகம்…
அங்கங்கே உண்டாகும் வா…

ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க…
ஒத்துக்கோ ஒத்துக்கோ…

பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்…
ஒத்திப்போ ஒத்திப்போ…

ஆண் : இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ…
பெண் : உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ…

ஆண் : பெண்ணெல்லாம் பெண்ணல்ல…
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல…

ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க…
ஒத்துக்கோ ஒத்துக்கோ…

பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்…
ஒத்திப்போ ஒத்திப்போ…


Notes : Kannathil Kannam Song Lyrics in Tamil. This Song from Watchman Vadivel (1994). Song Lyrics penned by Vaali. கன்னத்தில் கன்னம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading