உள்ளத்தில் நல்ல உள்ளம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்கள்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகர்ணன்

Ullathil Nalla Ullam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…
வல்லவன் வகுத்ததடா கர்ணா…
வருவதை எதிர்கொள்ளடா…

ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…
வல்லவன் வகுத்ததடா கர்ணா…
வருவதை எதிர்கொள்ளடா…

—BGM—

ஆண் : தாய்க்கு நீ மகனில்லை…
தம்பிக்கு அண்ணனில்லை…
தாய்க்கு நீ மகனில்லை…
தம்பிக்கு அண்ணனில்லை…
ஊர் பழி ஏற்றாயடா…
நானும் உன் பழி கொண்டேனடா…
நானும் உன் பழி கொண்டேனடா…

ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…
வல்லவன் வகுத்ததடா கர்ணா…
வருவதை எதிர்கொள்ளடா…

—BGM—

ஆண் : மன்னவர் பணி ஏற்கும்…
கண்ணனும் பணி செய்ய…
உன்னடி பணிவானடா கர்ணா…
மன்னித்து அருள்வாயடா கர்ணா…
மன்னித்து அருள்வாயடா…

—BGM—

ஆண் : செஞ்சோற்று கடன் தீர்க்க…
சேராத இடம் சேர்ந்து…
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா…
வஞ்சகன் கண்ணனடா கர்ணா…
வஞ்சகன் கண்ணனடா…

ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…
வல்லவன் வகுத்ததடா கர்ணா…
வருவதை எதிர்கொள்ளடா…

—BGM—


Notes : Ullathil Nalla Ullam Song Lyrics in Tamil. This Song from Karnan (1964). Song Lyrics penned by Kannadasan. உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading