தொட தொட மலர்ந்ததென்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்இந்திரா

Thoda Thoda Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே தொட்டவனை மறந்ததென்ன…
தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே தொட்டவனை மறந்ததென்ன…

ஆண் : பார்வைகள் புதிதா…
ஸ்பரிசங்கள் புதிதா…
மழை வர பூமி மறுப்பதென்ன…

ஆண் : பார்வைகள் புதிதா…
ஸ்பரிசங்கள் புதிதா…
மழை வர பூமி மறுப்பதென்ன…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே தொட்டவனை மறந்ததென்ன…

BGM

ஆண் : அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்…
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்…

பெண் : நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில்…
மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார்…

ஆண் : காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை…
பெண் : இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை…

பெண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே சுடச்சுட நனைந்ததென்ன…

ஆண் : பார்வைகள் புதிது…
ஸ்பரிசங்கள் புதிது…
நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன…

பெண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே சுடச்சுட நனைந்ததென்ன…

BGM

ஆண் : பனிதனில் குளித்த பால்மலர் காண…
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்…

பெண் : பசித்தவன் அமுதம் பருகிடத்தானே…
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்…

ஆண் : இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே…
பெண் : மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே…

பெண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே சுடச்சுட நனைந்ததென்ன…

ஆண் : பார்வைகள் புதிதா…
ஸ்பரிசங்கள் புதிதா…
மழை வர பூமி மறுப்பதென்ன…

ஆண் : பார்வைகள் புதிதா…
ஸ்பரிசங்கள் புதிதா…
மழை வர பூமி மறுப்பதென்ன…

ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன…
பூவே தொட்டவனை மறந்ததென்ன…

BGM


Notes : Thoda Thoda Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. தொட தொட மலர்ந்ததென்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading