தக்காளிக்கு தாவணிய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்விஜய் யேசுதாஸ் & ரேணு கண்ணன்யுவன் ஷங்கர் ராஜாவானவராயன் வல்லவராயன்

Thakkaliku Thavaniya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தக்காளிக்கு தாவணிய…
போட்டுவிட நான் வரட்டா…

பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா…
முட்டு தர நான் வரட்டா…

ஆண் : ஆட்டுக்கல்லு இடுப்பால்…
என்னை அரைக்கிறியே பொறுப்பா…

பெண் : சீமத்தண்ணி சிரிப்பால்…
என்னை பத்த வைக்குற நெருப்பா…

ஆண் : நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள…
இன்னிக்குதான் மாட்டிக்கிட்டான்…

பெண் : பட்டப்பகலுல வெட்டவெளியில…
வெட்கப்பட வச்சுப்புட்டான்…

ஆண் : தக்காளிக்கு தாவணிய…
போட்டுவிட நான் வரட்டா…

பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா…
முட்டு தர நான் வரட்டா…

—BGM—

ஆண் : பத்து ஊரு பசிய போக்கும்…
அழகு… அழகு…

பெண் : ஓ… பக்குவமா பாய போட்டு…
பழகு… பழகு…

ஆண் : நீ ஆசை விளையும் நிலமா…
விளைஞ்சு நிக்குற வளமா…

பெண் : நீ காலை சுத்தும் பாம்பா…
கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா…

ஆண் : ஆ… தக்காளிக்கு… தக்காளிக்கு…
தக்காளிக்கு… ஹே…

ஆண் : தக்காளிக்கு தாவணிய…
போட்டுவிட நான் வரட்டா…

பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா…
முட்டு தர நான் வரட்டா…

ஆண் : ஹே… ஆட்டுக்கல்லு இடுப்பால்…
என்னை அரைக்கிறியே பொறுப்பா…

பெண் : சீமத்தண்ணி சிரிப்பால்…
என்னை பத்த வைக்குற நெருப்பா…

ஆண் : வெள்ளம் வடியல சொல்ல முடியல…
தத்தளிச்சு சாகுறேண்டி…

பெண் : நண்டு வலையில குண்டு போடுற நீ…
ரெண்டுப்பட்டு வேகுறேண்டா…

—BGM—

ஆண் : மல்லிகைப்பூ வாசம் வீசும்…
மூச்சு… மூச்சு…

பெண் : ஆ… பனைவெல்லம் பாலில் கலந்த…
பேச்சு… பேச்சு…

ஆண் : உன் குருவிக்கூடு கொண்ட…
போடச்சொல்லுதே சண்ட…

பெண் : உன் மூக்கில் செவந்த மொளகா…
அதரி சிதறி பதற வைக்குதே என்னை…

ஆண் : ஆ… தக்காளிக்கு… தக்காளிக்கு…
தக்காளிக்கு… ஹே…

ஆண் : தக்காளிக்கு தாவணிய…
போட்டுவிட நான் வரட்டா…

பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா…
முட்டு தர நான் வரட்டா…

ஆண் : ஆட்டுக்கல்லு இடுப்பால்…
என்னை அரைக்கிறியே பொறுப்பா…

பெண் : சீமத்தண்ணி சிரிப்பால்…
என்னை பத்த வைக்குற நெருப்பா…

ஆண் : வெள்ளம் வடியல சொல்ல முடியல…
தத்தளிச்சு சாகுறேண்டி…

பெண் : நண்டு வலையில குண்டு போடுற நீ…
ரெண்டுப்பட்டு வேகுறேண்டா…

—BGM—


Notes : Thakkaliku Thavaniya Song Lyrics in Tamil. This Song from Vanavarayan Vallavarayan (2014). Song Lyrics penned by Snehan. தக்காளிக்கு தாவணிய பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading