சந்தோஷ கண்ணீரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான் & ஃபெபி மணிஏ.ஆர்.ரகுமான்உயிரே

Sandhosha Kanneere Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ம்ம்ம்… இரு பூக்கள் கிளை மேலே…
ஒரு புயலோ மலை மேலே…
உயிர் ஆடும் திகிலாலே…
என் வாழ்வின் ஓரம் வந்தாயே…
செந்தேனே…

—BGM—

ஆண் : இரு பூக்கள் கிளை மேலே…
ஒரு புயலோ மலை மேலே…
உயிர் ஆடும் திகிலாலே…
என் வாழ்வின் ஓரம் வந்தாயே…
செந்தேனே…

—BGM—

ஆண் : கண்ணீரே கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…
கண்ணீரே…
தேடித் தேடித் தேய்ந்தேனே…
மீண்டும் கண்முன் கண்டேனே…
பெண்ணே பெண்ணே…
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே…
கண்ணே கண்ணே காணாய் கண்ணே…
கண்ணீரே…

ஆண் : கண்ணீரே கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…
கண்ணீரே…
தேடித் தேடித் தேய்ந்தேனே…
மீண்டும் கண்முன் கண்டேனே…
பெண்ணே பெண்ணே…
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே…
கண்ணே கண்ணே காணாய் கண்ணே…
கண்ணீரே…

—BGM—

ஆண் : ம்ம்ம்… உன் பார்வை பொய்தானா…
பெண்ணென்றால் திரைதானா…
பெண் நெஞ்சே சிறைதானா…
சரிதானா…

ஆண் : பெண் நெஞ்சில் மோகம் உண்டு…
அதில் பருவத்தாபம் உண்டு…
பேராசைத்தீயும் உண்டு…
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று…

ஆண் : புதிர் போட்ட பெண்ணே நில் நில்…
பதில் தோன்றவில்லை சொல் சொல்…

ஆண் : கல்லொன்று தடை செய்த போதும்…
புல்லொன்று புதுவேர்கள் போடும்…
நம் காதல் அது போல மீறும்…

ஆண் : கல்லொன்று தடைசெய்த போதும்…
புல்லொன்று புதுவேர்கள் போடும்…
நம் காதல் அது போல மீறும்…
கண்ணில் கண்ணில் கண்ணீர்…
இன்பக் கண்ணீரே…

ஆண் : தேடித் தேடித் தேய்ந்தேனே…
மீண்டும் கண்முன் கண்டேனே…
பெண்ணே பெண்ணே…
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே…
கண்ணே கண்ணே காணாய் கண்ணே…
கண்ணீரே…

—BGM—

ஆண் : ம்ம்ம்… பால் நதியே நீ எங்கே…
வரும் வழியில் மறைந்தாயோ…
பல தடைகள் கடந்தாயோ…
சொல் கண்ணே…

ஆண் : பேரன்பே உந்தன் நினைவு…
என் கண்ணைச் சுற்றும் கனவு…
இது உயிரைத் திருடும் உறவு…
உன் துன்பம் என்பது வரவு…

ஆண் : ஏ… மர்ம ராணி நில் நில்…
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்…

ஆண் : உன்னோடு நான் கண்ட பந்தம்…
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்…
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்…

ஆண் : உன்னோடு நான் கண்ட பந்தம்…
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்…
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்…
கண்ணில் கண்ணில் கண்ணீர்…
இன்பக் கண்ணீரே…

ஆண் & குழு (பெண்கள்) : சந்தோஷக் கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…

ஆண் : தேடித் தேடித் தேய்ந்தேனே…
மீண்டும் கண்முன் கண்டேனே…
பெண்ணே பெண்ணே…

குழு (பெண்கள்) : தேடித் தேடித் தேய்ந்தேனே…
மீண்டும் கண்முன் கண்டேனே…
பெண்ணே பெண்ணே…

ஆண் : பெண்ணே பெண்ணே…
பேசாய் பெண்ணே…

குழு (பெண்கள்) : பெண்ணே பெண்ணே…
பேசாய் பெண்ணே…

ஆண் : கண்ணே கண்ணே…
காணாய் கண்ணே…

குழு (பெண்கள்) : கண்ணே கண்ணே…
காணாய் கண்ணே…

ஆண் : கண்ணீரே…

குழு (பெண்கள்) : கண்ணீரே…

ஆண் : கண்ணீரே கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…
கண்ணீரே…

—BGM—


Notes : Sandhosha Kanneere Song Lyrics in Tamil. This Song from Uyire (1998). Song Lyrics penned by Vairamuthu. சந்தோஷ கண்ணீரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading