ரத்தத்தப் பங்கு வச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழிஇளையராஜாபெரிய குடும்பம்

Rathatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…

ஆண் : சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

ஆண் : நேத்து வர ஒத்துமையா…
வாழ்ந்திருந்த சொந்தமடா…
யாரு கண்ணு பட்டதுவோ…
ஊரு கூட சொல்லுதடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : விதியா தட்டுக் கெட்ட மதியா…
வினையா மத்தவங்க சதியா…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

BGM

ஆண் : அம்மா மண்ணில் சாய்ந்ததம்மா…
வாழ வெச்ச வாழ மரம்…
சொன்னா சொல்லு தாங்கிடுமா…
ரோசம் உள்ள தாயின் மனம்…

ஆண் : பிள்ளைகள் பெத்தா நெல் மணிக் கொத்தா…
பெத்ததில் என்ன புண்ணியம் கண்டா…

ஆண் : பந்தமும் பாசமும் என்னாச்சு…
பெத்தவ சந்தியில் நின்னாச்சு…
பாடுகள் ஆயிரம் பட்டாச்சு…
பேச்சையும் மூச்சையும் விட்டாச்சு…

ஆண் : அம்மான்னு அம்மான்னு…
சொன்னது எல்லாம் சும்மாவா…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

BGM

ஆண் : பெத்தா இவ மூணு புள்ள…
ஒண்ணுக்கொண்ணு சேரவில்ல…
ஒண்ணா இப்ப சேந்திருக்கு…
பெத்தவள தூக்கயிலே…

ஆண் : தள்ளியே வச்சு வெந்தது பாதி…
கொள்ளியே வச்சு வேகணும் மீதி…

ஆண் : தொட்டிலில் போட்டவ தாலாட்டி…
தோள்களில் வைத்தவ சீராட்டி…
ஒவ்வொரு வேளையும் சோறூட்டி…
உங்கள தாங்கிய மூதாட்டி…
புண்ணான நெஞ்சோடு பூமியவிட்டு போறாளே…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…


Notes : Rathatha Song Lyrics in Tamil. This Song from Periya Kudumbam (1995). Song Lyrics penned by Vaali. ரத்தத்தப் பங்கு வச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading