பூப்பறிக்க சொல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் & ஸ்வேதா மோகன்மணி சர்மாமலை மலை

Pooparikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…

BGM

ஆண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மை விழி சில்லென்ற மார்கழி…
உன் மொழி சங்கீத செம்மொழி…
கை வழி வராதோ பைங்கிளி…
கொஞ்சலாம் நெஞ்சோடு கொஞ்சம் ஆடி…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டா…

ஆண் : அன்பான சிநேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே…
ஆனாலும் சுள்ளென உன்னர்சியை தூண்ட மாட்டேனே…

BGM

ஆண் : புன்னகை பூவை வீசி என்னை பூமியில் சாய்தாயே…
மண் மடி சேரும் முன்னே என்னை உன் மடி சேர்தாயே…

பெண் : என் விழி தூக்கம் பார்த்து இங்கு ஏழெட்டு நாளாச்சு…
கண்ணிமை நான்கும் வேர்த்து நிற்க காரணம் நீயாச்சு…

ஆண் : யார் யார்க்கு யாரோ யார் சொல்வாரோ…
பெண் : செம்மண்ணும் நீரும் சேர்ந்தால் பின் வேறோ…

ஆண் : கனவில் நினைக்கவில்லை…
கால்கள் நடக்கும் முல்லை…
எனக்கு கிடைக்கும் என நான்…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டா…

ஆண் : அன்பான சிநேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே…
ஆனாலும் சுள்ளென உன்னர்சியை தூண்ட மாட்டேனே…

BGM

பெண் : காரணம் இன்றி தேகம் மழை காலத்தில் வேர்கிரதே…
மையலை என்ன சொல்ல அது வெய்யிலை வார்கிரதே…

ஆண் : வெப்பத்தில் வாடும் போது இந்த தெப்பத்தில் நீயேறு…
எப்பவும் காதல் வந்தால் இங்கு ஆயிரம் கோளாறு…

பெண் : நீ இன்றி வாழ்ந்தால் நீர் தேடும் வேர்தான்…
ஆண் : நாம் ஒன்று சேர்ந்தால் வாழ்தாதோ ஊர்தான்…

பெண் : எனக்கு எனக்கு என்று…
இருக்கும் அழகு மொத்தம்…
உனக்கு உனக்கு இனி மேல்…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
ஆண் : அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டி…

பெண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நீ பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…


Notes : Pooparikka Song Lyrics in Tamil. This Song from Malai Malai (2009). Song Lyrics penned by Vaali. பூப்பறிக்க சொல்லி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading