பூமாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்சிற்பிராசி

Poomalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே…
காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…

ஆண் : பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே…
காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…

ஆண் : திசையேதும் தெரியாமல் விழும் மேகம் போல் ஆனேன்…
உன் வளையல் துண்டுகளாய் நான் உடைந்து தூள் ஆனேன்…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நீ தந்த நேசம் கண்ணுக்குள் நீந்தியது…
தாய் தந்த பாசம் இமையாக மாறியது…
கண்ணுக்கிங்கே இமைகள் ஆனது என்ன சுமைகள்…
பாசம் எல்லாம் இங்கே வெட்ட வெளி சிறைகள்…
சோகங்களை சொல்ல மொழி ஒன்றும் இல்லை… ஓஓஓ…

ஆண் : உன் காதல் முத்தத்தில் நான் கன்னம் நனைந்தேன்…
தாய் பாலின் ஈரத்தில் என் உள்ளம் கரைந்தேன்…
யார் பக்கம் நியாயமோ நீ சொல்லு உயிரே…

ஆண் : பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே…
காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…

BGM

ஆண் : கண்ணீரின் ஈரம் கன்னத்தில் காயாதா…
முந்தானை ஓரம் கைக்குட்டை ஆகாதா…
உள்ளம் என்ற ஒன்று உன்னை சேரும் வேளை…
தாயின் கைகள் தடுத்தால் என்ன செய்வேன் ஏழை…
உண்மை சொல்லப் போனால் நானே எனக்கில்லை… ஓஓஓ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி பாசக் கூண்டுக்குள் நான் மாட்டிக் கொண்டேனா…
என் வாழ்க்கைக் கோப்பைக்குள் விசம் ஊற்றிக் கொண்டேனா…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…

ஆண் : பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே…
காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…


Notes : Poomalai Song Lyrics in Tamil. This Song from Raasi (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. பூமாலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading