பெண்ணே காதல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.கேதேவாபம்மல் கே. சம்பந்தம்

Penne Kadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…
கண்ணால் கண்ணீர் துளி…
எந்த நாளும் பார்த்ததுண்டோடி…

ஆண் : பெண் என்றால்…
ஆணுலகம் கவிதை என்கிறதே…
கவிதை ஓர் கை வாளாய்…
ஆளை கொள்கிறதே…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

ஆண் : உண்மையில் நீ பூ பந்தோ… ஓஓ…
ஊர் எரிக்கும் தீ பந்தோ… ஓஓ…
ஆணின் நெஞ்சம் அம்மம்மா… ஓஓ…
நீ அடிக்கும் கார் பந்தோ…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

—BGM—

ஆண் : உன் மீது காதல் வைத்து…
உயிர் உனக்கு என்றான்… ஹோ…
அம்மா நீ எய்தும் கூட…
அதை பொறுத்து நின்றான்…

ஆண் : உந்தன் மீது குற்றம் ஏதும்…
விழாமல் செய்தான்…
உள் மனதில் கண்ணீர் வெள்ளம்…
விடாமல் பெய்தான்…

ஆண் : கை அணைத்து கையை கழுவ…
வந்தாயோ பெண்ணே…
காலகாலம் ஆணின் பாவம்…
வாராதோ பெண்ணே…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

—BGM—

ஆண் : விட்டதை மீண்டும் பெற…
விரும்பிடுதோ நெஞ்சம்… ஹோ…
தொட்டதை மீண்டும் தொட்டு…
தொடர்கின்றதோ எண்ணம்…

ஆண் : பொத்தி பொத்தி வைத்தால் கூட…
பொல்லாத காதல்…
எந்த நேரம் என்ன செய்யும்…
சொல்லாது காதல்…

ஆண் : கத்தி கூட காதல் போல…
கொல்லாது பெண்ணே…
காய பட்ட பின்னால் ஞானம்…
உண்டாச்சோ கண்ணே…

ஆண் : காதல் காலாவதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…
கண்ணில் கண்ணீர் நதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…

ஆண் : உன்னாலே ஓர் நிஜமே…
நிழலாய் போகிறதே…
அம்மம்மா ஓர் இதயம்…
தழலாய் வேகிறதே…

ஆண் : காதல் காலாவதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…


Notes : Penne Kadhal Song Lyrics in Tamil. This Song from Pammal K Sambandam (2002). Song Lyrics penned by Vaali. பெண்ணே காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading