| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மாரி செல்வராஜ் | ஜெயமூர்த்தி & மீனாட்சி இளையராஜா | சந்தோஷ் நாராயணன் | வாழை |
Paadhavathi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யப்பா நீ போன வழி…
பாதையில மண்டியிட்ட பாதவத்தி…
நான் மண்டியிட்ட பாதவத்தி…
ஆண் : யய்யா உன் புஞ்சிரிப்பு…
ரேகையில தீக்குழிச்ச பாதவத்தி…
நான் தீக்குளிச்ச பாதவத்தி…
ஆண் : ஒத்தபன கீத்துக்குள்ள…
ஓத்த ரூவா மின்னயில…
பத்துதால கேட்குமுன்னு…
பாதவத்தி நம்பலையே…
நான் பாதவத்தி நம்பலையே…
பாதவத்தி நம்பலையே…
ஆண் : பட்ட மரம் காய்க்குமுன்னு…
பத்து கதை கேட்டிருந்தேன்…
மொத்த மரம் போவமுன்னு…
பாதவத்தி நம்பலையே…
நான் பாதவத்தி நம்பலையே…
நான் பாதவத்தி நம்பலையே…
—BGM—
ஆண் : மலை உச்சியில பூத்த…
என் பிச்சு பூவ எங்க…
கொத்து கொத்தா காய்ச்ச…
என் வெள்ளரிப்பிஞ்ச எங்க…
ஆண் : கொல்லையில காஞ்ச…
என் பாட்டு சேலைய பார்த்தா…
பச்சை மரம் வேவும்…
பச்சை கிளியெல்லாம் நோவும்…
ஆண் : அட்டகாளியும் நான்தான்…
கொட்டுகாளியும் நான்தான்…
பட்டி தேடும் முட்டி மோதும்…
கண்ணுக்குட்டி வா வா…
என் கண்ணுக்குட்டி வா வா…
ஆண் : வத்திபோன மார நான்…
பிச்செடுத்து தாரேன்…
ரத்தமா நீ முத்தமா நீ…
மொத்தமா நீ வாயேன்…
சத்தமா நீ வாயேன்…
ஆண் : கண்ணே காணங்குருவி கத்திடுச்சி…
காடு மேடெல்லாம் கத்திடுச்சி…
உன்ன காணமுன்னுதான் கத்திடுச்சி…
ஆண் : வாழப்பூவு காட்டுக்குள்ள…
என் வாசப்பூவ நான் தேடயிலே…
பாம்பு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
பச்சை பாம்பு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
பாம்பு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
—BGM—
ஆண் : மந்தையில போன என் வரிக்குதிரய எங்க…
சந்தையில கேட்ட என் சீனிகெழங்க எங்க…
ஆண் : ஆத்துக்குள்ள நீந்தும்…
அந்த கொக்கு மீனா நானும் பார்த்தா…
நெஞ்சம் முட்டு மோதும்…
என் கண்ண கொத்தி கொண்டு போவும்…
ஆண் : ஏ பெத்ததாயும் நான்தான்…
தின்ன பேயும் நான்தான்…
அஞ்சி ஓடும் தப்பி ஓடும்…
செல்லக்குட்டி வா வா…
தங்ககட்டி வா வா…
ஆண் : ஏ வத்திபோன மாற நான் பிச்செடுத்து தாறேன்…
ரத்தமா நீ முத்தமா நீ மொத்தமா நீ வாயேன்…
சத்தமா நீ வாயேன்…
ஆண் : கண்ணே காட்டு தீயும்தான் பத்திடுச்சி…
வீடு நாடெல்லாம் பத்திடுச்சி…
உன்ன காணமுன்னுதான் பத்திடுச்சி…
ஆண் : கொரண்டிப்பூவு கூட்டுக்குள்ள…
ஒரு சொட்டு தேன நானும் தேடியிலே…
தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
கருந்தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
—BGM—
பெண் : அய்யா… நான் பாதவத்தி நான் பாதவத்தி…
உன்ன தப்பவிட்ட நான் பாதவத்தி…
உன்ன ஓடவிட்ட நான் பாதவத்தி…
உன்ன பறக்கவிட்ட நான் பாதவத்தி…
பெண் : நான் பாதவத்தி நான் பாதவத்தி…
நான் பாதவத்தி நான் பாதவத்தி…
நான் பாதவத்தி நான் பாதவத்தி… அய்யா…
—BGM—
Notes : Paadhavathi Song Lyrics in Tamil. This Song from Vaazhai (2024). Song Lyrics penned by Mari Selvaraj. பாதவத்தி பாடல் வரிகள்.
