ஒரு கோலக் கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காமகொடியன்பி. ஜெயச்சந்திரன் & சுனந்தாஇளையராஜாபொன் விலங்கு

Oru Kola Kili Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஒரு கோலக் கிளி சொன்னதே…
உண்மையா உண்மையா…
அது பேசும் பிள்ளை மொழியே…
நன்மையா நன்மையா…

ஆண் : ரோஜாவிலே முள்ளில்லாத பூவில்லையே…
ராசாத்தியே முல்லை பூவில் முள்ளில்லையே… ஏ…
அந்த காதலின் கோயிலில் கூட்டிலே வாழ்ந்திடும்…

பெண் : கோலக் கிளி சொன்னதே…
உண்மையா உண்மையா…

—BGM—

ஆண் : காட்டுப்பூவிலே கட்டாத மாலை கிட்டுமோ… ஓ…
ஏட்டில் தேடினால் என்னென்ன வார்த்தை கொட்டுமோ… ஓஓ…

பெண் : கோதையானவள் சொல்ல மொழியின்றி பேதையானதேன்…
கூட்டில் வாழ்ந்திடும் சின்னஞ்சிறு குயில் காட்டில் சேர்ந்ததேன்…

ஆண் : வளையோசை வழி சொன்னது…
விழி உந்தன் வழி வந்தது…
அந்த காதலின் கோயிலில் கூட்டிலே வாழ்ந்திடும்…

பெண் : கோலக் கிளி சொன்னதே…
உண்மையா உண்மையா…

ஆண் : அது பேசும் பிள்ளை மொழியே…
நன்மையா நன்மையா…

—BGM—

பெண் : கோயில் சன்னதி உள்ளே சென்றாலே கிங்கிணி மணியும்…
ஓசை தந்ததே ஓன்றாக வாழ சொன்னதே வழியும்…

ஆண் : காலம் இணைத்ததே…
பிரித்திட இங்கும் யாரும் இல்லையே… ஏ…
வாழ்க்கை கிடைத்ததே…
நம்பி விடு இனி எந்தன் சொல்லையே… ஏ…

பெண் : ஒரு மாலை எனக்கு கொடுக்க…
வருங்காலம் முழுதும் இனிக்க…
அந்த காதலின் கோயிலில் கூட்டிலே வாழ்ந்திடும்…

ஆண் : கோலக் கிளி சொன்னதே…
உண்மையா உண்மையா…

பெண் : அது பேசும் பிள்ளை மொழியே…
நன்மையா நன்மையா…

ஆண் : ரோஜாவிலே முள்ளில்லாத பூவில்லையே… ஏ…
ராசாத்தியே முல்லை பூவில் முள்ளில்லையே… ஏ…

பெண் : அந்த காதலின் கோயிலில் கூட்டிலே வாழ்ந்திடும்…

ஆண் : கோலக் கிளி சொன்னதே…
உண்மையா உண்மையா…

பெண் : அது பேசும் பிள்ளை மொழியே…
நன்மையா நன்மையா…


Notes : Oru Kola Kili Song Lyrics in Tamil. This Song from Pon Vilangu (1993). Song Lyrics penned by Kamakodiyan. ஒரு கோலக் கிளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading