ஒன்கிட்ட என்னமோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசத்யபிரகாஷ் டி & கல்யாணி நாயர்விஷால் சந்திரசேகர்கன்னிராசி (2020)

Onkitta Enamo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு…
அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு…

ஆண் : ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு…
ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு…
ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு…

பெண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு…
அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டனும் எனக்கு…

பெண் : ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு…
ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு…
ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு…

BGM

ஆண் : சாராய மழைய பூவே நீ பொழிய…
ஏறாத போதை ஏறும் எனக்கு…

பெண் : ஏதேதோ அறிய பூராவும் தெரிய…
தள்ளாடுறேனே நானும் அதுக்கு…

ஆண் : கும்மிருட்டு வேளையில சிம்மினியா நீ இருக்க…
எக்க சக்க ஆசை என்னை அனைக்குதே…

பெண் : சூடா நீ கொதிச்சா…
சொல்லாம பறிச்சா…
பாசாங்கும் பண்ணமாட்டேன் பாயயும் விரிச்சா…

ஆண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு…
அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு…

BGM

பெண் : வானோட நெலவும் வாயோட உணவும்…
சேராம போன சேதி இருக்கா…

ஆண் : ஈரேழு உலகம் இல்லாத பொழுதும்…
உன்கூட வாழ்வேன் நானும் செருக்கா…

பெண் : உச்சி தொட்டு பாதம் வரை…
எப்பொழுதும் உன் நினைப்பு…
அப்பளத்த போல என்னை நொறுக்குதே…

ஆண் : தானா நீ இழுத்தா…
தாம்பூலம் கொடுத்தா…
வேணான்னு சொல்லமாட்டேன் வாங்கிப்பேன் கருத்தா…

BGM


Notes : Onkitta Enamo Song Lyrics in Tamil. This Song from Kannirasi (2020). Song Lyrics penned by Yugabharathi. ஒன்கிட்ட என்னமோ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top