ஒளிமயமான எதிர்காலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபச்சை விளக்கு

Olimayamaana Ethirkaalam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒளிமயமான எதிர்காலம்…
என் உள்ளத்தில் தெரிகிறது…

—BGM—

ஆண் : இந்த உலகம் பாடும் பாடல் ஓசை…
காதில் விழுகிறது…

ஆண் : ஒளிமயமான எதிர்காலம்…
என் உள்ளத்தில் தெரிகிறது…

—BGM—

ஆண் : நால்வகை மதமும் நாற்பது கோடி…
மாந்தரும் வருகின்றார்…
அந்த நாயகன் காணும் வானில் இருந்தே…
பூமழை பொழிகின்றார்…

—BGM—

ஆண் : நால்வகை மதமும் நாற்பது கோடி…
மாந்தரும் வருகின்றார்…
அந்த நாயகன் காணும் வானில் இருந்தே…
பூமழை பொழிகின்றார்…

ஆண் : மாலை சூடி எங்கள் செல்வி…
ஊர்வலம் வருகின்றாள்…
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க…
என்றவர் பாடுகின்றார்…

—BGM—

ஆண் : ஒளிமயமான எதிர்காலம்…
என் உள்ளத்தில் தெரிகிறது…

—BGM—

ஆண் : குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே…
குலமகளே வருக…
எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம்…
கண்ணகியே வருக…

—BGM—

ஆண் : குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே…
குலமகளே வருக…
எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம்…
கண்ணகியே வருக…

ஆண் : மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி…
திருமகளே வருக…
வாழும் நாடும் வளரும் வீடும்…
மணம் பெறவே வருக…

—BGM—

ஆண் : ஒளிமயமான எதிர்காலம்…
என் உள்ளத்தில் தெரிகிறது…
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை…
காதில் விழுகிறது…

ஆண் : ஒளிமயமான எதிர்காலம்…
என் உள்ளத்தில் தெரிகிறது…


Notes : Olimayamaana Ethirkaalam Song Lyrics in Tamil. This Song from Pachhai Vilakku (1964). Song Lyrics penned by Kannadasan. ஒளிமயமான எதிர்காலம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading